• அவனும் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலையீடுகள் இருக்க கூடாது என்பதில் இன்றைய பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கணவராக இருந்தால் பிரைவசி வேண்டும் என்பது தான் இன்றைய பல பெண்களின் எதிர்பார்ப்பு.
• எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமென பெண்கள் கூறுகிறார்கள். எதற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்ப்பார்க்காமல் தன்னால் எதுவும் முடியும் என்று எந்த செயலையும் முயன்று பார்க்கும் ஆண்களுக்கு தான் தங்களின் முதல் ஓட்டு என்பது பெண்களின் கருத்து.
• எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசவது, ஏதாவது செய்யும் போது “இது சரியாக வருமா???” என கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், கடினமாக வேலையாக இருந்தாலும் உன்னால் முடியும் என்று உற்சாகப்படுத்தும் கணவரையே பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர். என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் பெண்கள். இந்த குணாதிசயம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள்.
• மனதளவில் முதிர்ச்சியாக இருக்க வேண்டும். என்ன செய்தாலும், ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்தால் கூட பரவாயில்லை. ஆனால், எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும். செயலில் இறங்கிய பிறகு யோசிப்பது தவறு. வெளி வேலைகளில் மட்டுமின்றி வீட்டிலும் கூட இதை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள் பெண்கள்.