அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துச் சென்று யாழ் அசோக்கா விடுதியில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த மண்டையன் குழுத்தலைவர் தான் இந்த சுரேஷ் பிரெமச்சந்திரன் எனபவர்   எனபதனை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

339

தற்போது பலாராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது தமிழ்க்கட்சிகளின், தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றியதாகும். இது அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு கருத்தாகும்.
ஆனால், இவ்வொற்றுமை சீர்குலைவதற்கான காரணங்களையும் நபர்களையும் பற்றி நாம் ஆராய்ந்து பார்க்காது மேலெழுந்தவாரியாக குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை. முதலில் தமிழ்க்கட்சிகளின் இந்த “ஒற்றுமை” இதுவரை காலம் நிலைத்திருந்தமைக்குக் காரணம், தமிழீழ விடுதலைப் புலிகளேயன்றி இக்கட்சிகளின் கொள்கைப் பற்று அல்ல எனபதற்கு மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்புமே கடந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்று 22 ஆசன்ங்களைக் கைப்பற்றக் காரணமாக இருந்தது என்பதையும் எவராலும் மறுத்துரைக்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள், அல்லது விடுதலைப் புலிகளின் கொள்கைகளை த.தே.கூ ஏற்றுக்கொண்டு நடக்கச் சம்மதித்தார்கள் என்பதனாலேயே மக்களும் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினார்ளே தவிர த.தே.கூ மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல என்பதனை கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அந்த 22 பேரும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரையும் இன்றைய த.தே.கூ தலைமைப்பீடம் ஒதுக்கி ஓரம் கட்டி உள்ளது.
தமிழர்களின் உயிர் மூச்ச்சான தாயகம், தேசியம், சுய நிர்ணயம் போன்றவற்றின் சொற்பிரயோகங்களைக்கூட, யாருடையதோ திருப்திக்காக, இயன்றவரை தவிர்க்க முயல்கின்றனர். இந்திய ஆசீர்வாதத்துடன் திரு. சம்பந்தர் அவர்களின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரகசியத் திர்வுத்திட்டங்களில் கூட சொல்ல்லங்காரமாகவே இச்சொற்பதங்கள் வந்து போவதாக அறிய முடிகிறது.
இத்தீர்வுத்திட்டம் பற்றி த.தே.கூ முக்கியஸ்தர்கள் கூட அறியாதவர்களாகவே இருப்பதாகவும் அறிய முடிகிறது. எமது மக்களிற்கென இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இத்தீர்வுத்திட்டம் உண்மையிலே நியாயமனது என இவர்கள் நம்பினால், ஏன் இத்திட்டத்தை தமது தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் முன் வைத்து, மக்களின் அங்கீகாரத்தைப் பெறக்கூடாது?.
அது மட்டுமல்ல்லாது தமிழீழத்தை தான் ஒருபோதும், 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும், ஆதரித்தது கிடையாது என்று சில இடங்களில் கதைத்துள்ள திரு.சம்பந்தர், இக்கருத்தை ஏன் மக்கள் முன் பகிரங்கமாகக் கூறி வாக்குக் கேட்கக்கூடாது? தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஒருப்போதும் ஏற்றுக்கொள்ளாத, எக்காலத்திலும் விடுதலிப்புலிகளின் கருத்துகளுடன் ஒத்துவராத சம்பந்தர், தனது தேர்தல் வெற்றிக்காக மட்டுமே 2004, 2001 இல் புலி ஆதரவுப் பாசங்கு காட்டி வாக்குக்கேட்டிருந்தார்.

அதுமட்டுமல்ல திரு.சம்பந்தர் அவர்களின் பாசத்திற்குரிய ‘தம்பி’ திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் என்பவரும் அன்றுதொட்டு விடுதலைப் புலிகளிற்கு எதிரான் நிலைப்பாட்டில் இருப்பவர். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் புலிகளிற்கு உதவினார்கள், தொடர்பு வைத்திருந்தார்கள் போன்ற காரணங்களைக் காட்டி அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துச் சென்று யாழ் அசோக்கா விடுதியில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த மண்டையன் குழுத்தலைவர் தான் இந்த சுரேஷ் பிரெமச்சந்திரன் எனபவர் 

எனபதனை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இவரின் ஆட்பிடிப்பிற்கு அஞ்சி எத்தனையோ இளைஞர்கள் தமது கல்வியினை சீரழித்து வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றுள்ளார்கள். பெற்றவர்களின் மரணவீட்டுக்கு கூட வரமுடியாது தலைமறைவாக இருந்து இவரின் ஆட்பிடிப்பில் இருந்து தப்பியதையும் எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். விடுதலிப் புலிகள் தமிழ் மக்களின் ஒறுமைக்காக எடுத்த முயற்சியை, பாராளுமன்ற பதவிக்காக இந்தப் பிரகிருதிகள் பாவித்து நாடகமாடிவிட்டு, விடுதலைப்புலிகள் அரங்கில் இல்லாத இக்காலப் பகுதியில் திரு.சம்பந்தரும், திரு. சுரேஷ்ஷும் தமது சுய ரூபத்தைக் காட்ட்த்தொடங்கி விட்டார்கள்.
இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக குண்டுகளாலும் பட்டினி மருந்துத்தடையாலும் கொல்லப்படக் காரணமாக இருந்த்து இந்தியா என்பது மறுக்க முடியாத உண்மை. அது மட்டுமல்லாது, இனவாத சிறிலங்கா அரசிற்கெதிராக சர்வதேச அரங்கில் எடுக்கப்படவிருந்த தீர்மான்ங்களையும் தடுத்த பெருமையும் இந்தியாவிற்கே உரியது. இப்படியான ‘பெருமைகளை’ உடைய இந்தியாவின் மனதில் நற்பெயர் எடுப்பதற்காக திரு.சம்பந்தரும், திரு. சுரேஷும் விடுதலைப்புலிகளின் ஆதரவுப்போக்கு உடையவர்களினை ஓரம்கட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளினைப் பெற்ற திரு.கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் உரிய காரணங்கள் கூறப்படாது ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், த.தே.கூ வின் நோக்கம் என்ன எனபதையும் அவர்கள் யார் என்பதையும் யாழ் மாவட்ட் த.தே.கூ வேட்பாளர் பட்டியலில் எப்படியோ இடம்பிடித்தவர்களின் வரலாறு கூறும்.
கடந்த மாதம் வரை சிறீதர் தியேட்டரில் திரு.தேவானாந்தாவை வாழ்த்தி வந்த, அவரின் பிரச்சார சுலோகங்களினை தயாரித்து வந்த “மெத்தப்படித்தவர்” ஒருவர் இன்று திடீரென தேசியப்பற்றாளானாக அவதாரம் எடுத்து த.தே.கூ வின் வேட்பாளர் ஆகியுள்ளார். அவரது பிரச்சாரச் சுவரொட்டிகளில் இருக்கும் “அபிவிருத்திக்காக அரசியல் பலம் தாருங்கள்” என்ற வாசகம் சொல்லும் அவர் எங்கிருந்து வந்தார் என்பதை மட்டுமல்ல எதை நோக்கிப் போக இருக்கிறார் என்பதனையும். இது தவிர கடைசி நிமிடம் வரை ஒரு சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதாக இருந்துவிட்டு கடைசியில் அக்குழுவிற்கும் தனது சுயரூபத்தைக்காட்டி விட்ட்தாகவும் தகவல்.
கடந்த மாநகரசபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, பின்னர் தான் பிழையான முடிவு எடுத்து விட்ட்தாகப்பகிரங்கமாகப் புலம்பித்திரிந்த சட்டத்தரணிக்கு, இந்த முறை ரெலோ சார்பில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் அடிப்படை அங்கத்துவம் கூட அவரிற்கு மறுக்கப்பட்ட நிலையிலேயே அவர் டெலோ சார்பில் கதிரை ஏற களம் குதித்து உள்ளார்.
முன்பு விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட பின்னர் தனது சுய தேவைகளிற்காக அவர்களின் பின்னால் திரிந்துவிட்டு, இத்தனை வருஷங்களும் இந்தியாவில் இருந்து விட்டு திடீரென யாழ்ப்பாணத்தில் முளைத்த சூழல் பற்றாளனிற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை பல உண்மைகளை உணர்த்தி நிற்கின்றன.
கடந்த 15 வருடங்களாக ‘உயிர்ப்பயம்’ என்று இந்தியாவில் பதுங்கி இருந்தவர், திடீரென உயிப்பயம் துறந்து தேசம் காக்க புறப்பட்டமை புல்லரிக்க வைக்கிறது. கடந்த தேர்தலில் தமிழ் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டுத் தோல்விஅடைந்து, பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக “அறிவித்த” நபரிற்கு தமிழரசுக்கட்சி சார்பாக சந்தர்ப்பம். நிதி நிறுவனம் ஒன்றில் தமது சேமிப்புகளை எல்லாம் தொலைத்தவர்களால் தேடப்படுகின்ற, கொழும்பிலே வாழ்ந்து வருகின்ற அந்த முன்னாள் நிதி நிறுவன பங்காளரும் அதன் மூலமாக இந்நாள் தொழிலதிபர் ஆகிய நபரிற்கு………… என்ன எழுதுவது என்று கூட தெரியவில்லை.
அவரின் எந்த கொள்கைக்காக அல்லது எந்தக்கட்சி சார்பாக அவரிற்கு வாய்ப்பு என எவரிற்கும் புரியவில்லை. அவரின் நியமனம், புதிதாக ஒரு தேசியக் கட்சியும் த.தே.கூ வில் இணைந்துள்ளாதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஆனால் அவரது நியமனத்திற்குக் காரணம்,அவர் ஒரு சிறந்த சமூக சேவகராம்!
SHARE