80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி மறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்பிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் கலக்கிக்கொண்டிருந்தார்.
தனக்கென்று தனி இடத்தை பிடித்திருந்த நடிகை அம்பிகாவிற்கு ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஜோடியாக நடிக்க அம்பிகாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது.
சிவாஜி, பிரபு
அவர்கள் வேறு யாருமில்லை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், அவருடைய மகன் பிரபுவிற்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தான் நடிகை அம்பிகாவை தேடி வந்துள்ளது.
கிடைத்த வாய்ப்பை தவறவிடாத நடிகை அம்பிகா, இருவருடனும் ஜோடியாக நடித்தார். சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக வெள்ளை ரோஜாக்கள் படத்திலும், பிரபுவுடன் திருப்பம் படத்திலும் ஒரே நேரத்தில் நடிகை அம்பிகா ஜோடியாக நடித்தாராம்.
ஆனால், இது அவருக்கு பின்னடைவாக அமையவில்லை. இதன்பின் தான் தொடர்ச்சியாக பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை அம்பிகா கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.