அனைத்து ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களினதும் சம கால எதிர்பார்ப்பு அப்பிளின் iPhone 7 பற்றியதாகவே இருக்கின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள இக் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
இத் தகவல்கள் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைப்பதாகவே காணப்படுகின்றது.
இப்படியிருக்கையில் அப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த அளவினை விடவும் iPhone 7 இற்கான கேள்வி அதிகமாக இருக்கும் என புள்ளிவிபர அடிப்படையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி அந் நிறுவனம் முதன் முறையாக 65 மில்லியன் வரையான கைப்பேசிகளையே அறிமுகம் செய்ய தீர்மானித்திருந்தது.
எனினும் அப்பிள் தயாரிப்புகளுக்கு அதிகரித்து வரும் மவுசு காரணமாக இக் கைப்பேசிக்கான கேள்வி 72 மில்லியன் தொடக்கம் 78 மில்லியன்கள் வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை Economic Daily Times உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
எது எப்படியோ செப்டெம்பர் மாதத்திற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.