அப்பிள் அறிமுகம் செய்த iOS புதிய பதிப்பில் பாரிய கோளாறு (வீடியோ இணைப்பு)

273
அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9.3.1 இனை அறிமுகம் செய்திருந்தது.இப் புதிய பதிப்பினை iPhone 6S, 6S Plus கைப்பேசிகளில் நிறுவி பயன்படுத்தும்போது பாரிய குறைபாடு ஒன்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை கடவுக் குறியீடு (Passcode) இன்றியே பார்வையிடக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் iPhone 6S மற்றும் 6S Plus கைப்பேசிகளில் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை இருப்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது Settings -> Privacy -> Photos சென்று Siri என்பதை Disable செய்வதன் மூலம் கடவுக் குறியீடு இன்றி புகைப்படங்களை பார்வையிடுதலை தடுக்க முடியும்.

SHARE