அப்பிள் நிறுவனத்தை ஓரங்கட்ட கூகுளின் ’பலே’ திட்டம்

262

625.500.560.350.160.300.053.800.748.160.70 (7)

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 லட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் நேரிடையாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.

அதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி மூலம் இந்தியாவை,மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2018ம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் எனவும், அதேசமயம் அமெரிக்காவில் இந்தியர்களை காட்டிலும் 3ல் ஒரு பங்கு மென்பொருள் பொறியாளர்களே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

SHARE