அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

743
தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை அப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான 2014ம் ஆண்டிற்கான Worldwide Developer Conference நிகழ்விலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 400 மில்லியனுக்கும் அதிகமானவை iPhone கள் எனவும், 200 மில்லியன் வரையானவை iPad கள் எனவும், 100 மில்லியன் வரையானவை iPod Touch சாதனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE