“வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன்” – சரத் பொன்சேகா

857

Sarath Fonsekaவாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தபால் மூலமே வாக்கு அளித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் தடவையாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிலியன்தலை பெட்டகன்தர சுமனசார வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அரசியல் சாசனத்திற்கு அமைவாக வாக்களிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், தேர்தல் திணைக்களமும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வாக்களிப்பில் பங்கேற்றதன் மூலம் எனது குடியுரிமை ரத்து செய்யப்படவில்லை என்பதனை மக்களுக்கு எடுத்துரைக்க முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு அதற்காக ஆவணங்கள் நிரூபிக்கப்பட்ட எவரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு அதற்காக ஆவணங்கள் நிரூபிக்கப்பட்ட எவரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இன்று (29) தனது வாக்கினை கெஸ்பாவ தொகுதியிலுள்ள பிலியந்தலையில் வழங்கியிருக்கிறார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர்,

இரண்டு வருடங்களுக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்ட பொன்சேகாவின் சிவில் உரிமை பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று தனது வாக்குரிமையை பயன்படுத்தியிருக்கிறார்.

சட்டப்படி வாக்குரிமை பெற்ற எவரும் வாக்களிக்க முடியும். சரத் பொன்சேகா வாக்களித்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வாக்குப் பட்டியலில் பெயரிருந்து, அதனை நிரூபிக்கும் ஆவணமும் ஒருவரிடம் இருந்தால் அவர் வாக்களிக்கத் தகுதியானவரே. ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர், மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சரத் பொன்சேகாவின் மனைவி, அனோமா பொன்சேகா கூறுகையில்…

எமக்கு இந்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. கடந்தமுறையும் எமக்கு வாக்குச் சீட்டுக்கள் வந்திருந்தன. ஆனால், அச்சமயம் நாங்கள் இராணுவ விடுதியில் தங்கியிருந்ததால் அந்த வாக்குச் சீட்டுகள் எமக்கு வழங்கப்படவில்லை. இம்முறை எமது கைக்கு வாக்குச் சீட்டுக்கள் கிடைத்தமையால் பிலியந்தலையில் எமது வாக்குரிமையை பயன்படுத்தி வாக்களித்தோம் என்று கூறினார்.

சரத் பொன்சேகாவின் வாக்குரிமை தொடர்பில் சர்ச்சை?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் வாக்குரிமை தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா வாக்களித்துள்ளார். எனினும், சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராணுவ நீதிமன்றில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைய சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

2010ம் ஆண்டில் இராணுவ நீதிமன்றம் சிவில் உரிமைகளை ரத்து செய்ததுடன், 2011ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்திருந்தது. எவ்வாறெனினும், ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இம்முறை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் வாக்களி;த்துள்ளார். இந்த ஆண்டு வாக்காளர் இடாப்பில் தனது பெயரை பதிவு செய்து, வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார். தேர்தலில் வாக்களித்ததாகவும், வாக்காளர் அட்டை சரத் பொன்சேகாவிற்கு கிடைத்ததாகவும் கட்சி உறுதி செய்துள்ளது.

SHARE