அமெரிக்கத் தூதரகத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றினால் மட்டுமே ISIS தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியும்- இல்லையேல் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்கும்.

499

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதத்தை இலங்கை அரசினால் கட்டுப்படுத்தமுடியாது. கட்டுப்படுத்தவேண்டுமாக இருந்தால் அமெரிக்கத் தூதரகம் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். அமெரிக்காவையும் நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும். ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதம் என்பது புலோக அரசிலையிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு யுத்தமென்றால் தற்போது இருக்கக் கூடிய நவீன உலகத்தில் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். உதாரணமாக ஒரு வரலாற்றை தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். 1990ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் விடுதலைப்புலிகள், ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்களுக்கு இந்திய அரசாங்கமே ஆயுதப்பயிற்சி அழித்தது. ஆயுதங்கள் வழங்குவதோடு பெரும்தொகை பணமும் வழங்கியது. இதற்கான காரணங்களைப் பார்க்கின்ற பொழுது ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒரு ஆயுதப் போராட்டக் குழுவை உருவாக்குவதாக இருந்தால் இன்னுமொரு நாட்டின் அரசியல் பின்னணியும், அந்தோடு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவேண்டும். இலங்கையில் போராடிய
இயக்கங்களின் நோக்கம் தேசியம், சுயநிர்ணயம் சார்ந்ததாக இருந்தது. அந்த அடிப்படையில் தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இந்தியாவால் உதவிகள் வழங்கப்பட்டது.போராட்ட இயக்கங்களை இலங்கையில் ஏற்படுத்தியது. இந்தியா திடீர் என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஒரு இனத்தினுடைய விடுதலைப்க்காக  போராடிய ஆயுதக்கட்சிகளை பயங்கரவாதிகளாகத் சித்தரித்தது என்பது இந்தியாவின் சுயநல விடையத்தையே சுட்டிக் காட்டுகின்றது.

அதே நேரம் பிராந்திய வல்லரசாக இருக்கக் கூடிய இந்தியாவை 64 தீவிரவாத அமைப்புக்களை 24மாநிலங்கள் உள்ளடங்களாக வைத்திருக்கின்றது. இந்தியாவில் இந்திய அரசுக்கே சவால் விட்ட வீரப்பனையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தனது பிராந்திய சுயநல அரசியலுக்காக  வீரப்பனைப் பயன்படுத்திய அதே நேரம் இந்திய அரசு தனது அரசுக்கு வீரப்பன் குழுவினரால் பிரச்சனை ஏற்படப்போகின்றது எனக் கருதி வீரப்பனை முடிவுக்கு கொண்டு வந்தது. அதே போன்று தமிழீழ விடுதலைப்புலிகளை தனது பிராந்திய நலனுக்காக பயன்படுத்திய இந்தியஅரசு தனது தேவை முடிந்த பின் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி இனவிடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் இன்று விடுதலைப்புலிகள் இன்னும் அரசியல் பலத்தோடு இருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த நாட்டிலிருந்து நீக்கப்படுமாக இருந்தால் இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் அரசியல் காரியலயங்கள் நிறுவப்படும். நாடுகளைப் பொறுத்தவரையில் தனது புலோக அரசியலிலேயே அக்கறை செலுத்துகின்றனர்கள். நாடுகளுக்கு நாடு அக்கறை செலுத்துவார்கள். உலகிலேயே ஐம்பத்தெட்டு தீவிரவாத அமைப்புக்கள் உள்ளன. அவர்களுடைய இலட்சியம் எல்லாமே தனது இனத்துக்குரிய விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே. இவர்களுள் அல்கொய்தா, ஐஎஸ் ஐஎஸ் போன்றவர்கள் அல்ல. லக்ஸ்தடு தொய்மா, நக்சலைட்டுகள் போன்றவர்கள் இவர்களைப் போன்றவர்கள் அல்ல. உலகத்திலேயே 85 தீவிரவாத அமைப்புக்களைக் கொண்டுள்ளது பாக்கிஸ்த்தான். அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவே இவர்களை வைத்துள்ளது. இந்தியா தனது நாட்டை ஆக்கிரமித்து விடும் என்ற காரணத்தினால் இவ் தீவிரவாத அமைப்பை பாக்கிஸ்த்தான் வைத்துள்ளது. ஆகவே ஒரு விடையத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற முஸ்லீம் தீவிரவாத தாக்குதல் என்பது பிரதானமாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இலங்கையில் இருக்கக் கூடிய தௌஹீத் ஜமாத்தை தழுவிய முஸ்லீகள்  தீவிரவாதிகளுடன் தொடர்பினை வைத்திருக்கின்றார்கள். ஆகவே இந்த ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதத்தை உலக அளவில் வளர்த்துவிட்ட நாடு தான் அமெரிக்கா. அமெரிக்காவில் 52 மாநிலத்திலும் ஐம்பத்திரண்டு புனாய்வுப் பிரிவு உள்ளது. அவையெல்லாவற்றிற்கும் C.I.A தான் தலைமைவகிக்கின்றது. ஒரு நெறிப்படுத்தலின் கீழ் இவை இயங்கி வருவதால் அமெரிக்கா அனைத்து நாடுகளையும் தற்பொழுது ஆக்கிரமித்து தனது சொல்லுக்குள் வைத்துள்ளது அடிபணியாத எந்த நாடாக இருந்தாலும் சரி வண்முறைக் கலாச்சாரத்தை அந்நாடுகளில் தூண்டிவிட்டு அந்நாட்டுக்குள் தன் தரையிறக்கத்தை இலகுவில் மேற்கொள்கின்றது. இதற்கு உதாரணமாக ஒசாமபிள்ளேடனைப் பயன்படுத்தி அல்கெய்தா இயக்கத்தின் ஊடாக எல்லா நாடுகளிலும் தனது தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அதன் பின்னர் ஈராக், ஈரான், சிரியா, லிபியா, மியன்மார்க், பாலஸ்த்தீனம் போன்ற நாடுகளில் அந்த முஸ்லீம் மக்களையே அவர்களுடன் மோதவிட்டு அதற்குள் குளிர் காய்ந்தத அமெரிக்கா. இவ்வாறான கொலைத் திட்டங்களையும் பின் நின்று இயக்கியது கலாப்போக்கில் அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கைகளை அறிந்த ஒசாமாபிள்ளேடன் அமெரிக்கா அரசாங்கத்தின் மீது பெரிய தாக்குதலை மேற்கொண்டார். அதுவே செம்ரம்பர்-11 தாக்குதலாகும். தமிழீழ விடுதலைப்புலிகளை முடிவுக்குக் கொண்டுவர நோர்வே நாட்டை சமாதானத் தூதுவராகக் கொண்டு வந்து இறுதியில் ஆயுதப்போராட்டத்தை அழித்தொழிக்க அமெரிக்காவே முன் நின்று செயற்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் ரீகன் கப்பல் வலைகுடாவில் இருந்து இருநூற்று ஐம்பது கடல் மைல் தூரத்திற்கு
அப்பால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதியாக விடுதலைப்புலிகளின் தலைவரை சரணடையுமாறும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளுக்கு தலை வகித்த கே.பி என்னும் குமரன் பத்மநாதன் அவர்களையும் சரணடையுமாறு அமெரிக்கா பணித்தது. இதனை ஏற்க மறுத்த பிரபாகரன் இறுதி வரை களமாடினார் என்பது உலகறிந்த உண்மை.

ஒரு நாட்டின் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்தால் தான் அந்நாடு அபிவிருத்திப் பாதையில் செல்லமுடியும். இலங்கையின் முதலாவதாக உள்ளாசப் பிரயாணிகள் மீதே தாக்குதல் நடந்தப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் இந்த நாட்டை பொருளாதாரரீதியில் கட்டியெழுப்புவது கடினம். அமெரிக்கா நினைத்தால் மட்டுமே இலங்கையிலிருந்து ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளை வெளியேற்ற முடியும். இலங்கையில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் அமெரிக்க பின்னணியும் உள்ளது. இதற்கு ஈஸ்ரேல் நாடு  உறுதுணையாக செயற்படுகின்றது. ஆகவே அண்மைய நாடுகளின் பொலிஸ் இராணுவக் கட்டமைப்பை இலங்கையில் அனுமதிப்பதால் இந்நாடு பாரிய நெருக்கடியைச் சந்திக்கின்றது. அல்கொய்தா தீவிரவாதிகள் என்பது அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்டதொன்று இதற்கு உதாரணம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அன்னியநாட்டு செலவானியைப் பெற்றுக் கொள்ள இலங்கை அபிவிருத்தி நாடாக வளர உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். ஏற்றுமதியை இறக்குமதியை துரிதப் படுத்தவேண்டும். இந் நாட்டின் யுத்தமற்ற சூழ்நிலை காணப்படவேண்டும். இவ்வாறான சூழ்நிலை இந் நாட்டில் ஏற்படுத்தாது ஒரு கலவரமாக இலங்கையை வைத்துக் கொள்ள சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் விரும்புகின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தின் போது உல்லாசசப் பயணிகளைத் தாக்கவில்லை. யுத்த காலத்திலும் பொருளாதாரம் சிறப்பாகவே காணப்பட்டது. ஆகவே ஒரு சீரற்ற நிலமையை உருவாக்க தனது சர்வதிகாரப் போக்கை இந் நாட்டில் தினித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் என்று இன் நாட்டில் வெளியேறுகின்றதோ அன்று தான் எமது நாட்டில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதத்தை இல்லாது ஒழிக்கமுடியும். இதற்கு மற்றுமொரு மாற்று வழி கருதினால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இந் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கவேண்டும் என்பதே ஆகும்.

SHARE