தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் பலர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தளமிட்டிருப்பதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாகரனுடைய தலைமைத்துவம் அல்லாது விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை வைத்து மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இலங்கையரசிற்கு ஒருபக்கம் ஆதரவை தெரிவிக்கும் அமெரிக்கா மறுபுறத்தில் எதிர்ப்பையும் காட்டிவருகிறது. ஜெனிவாத் தீர்மானத்தின் போதும் தமிழ் மக்களுக்காதரவாக அமெரிக்க அரசு செயற்பட்டுவந்தது. அமெரிக்க அரசானது தனது சுயநலத்திற்காக விடுதலைப்புலிகளை மீளவும் கட்டியெழுப்புவதற்கான ஆயத்தங்களை செய்துகொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை மீது ஆதீக்கத்தினைச் செலுத்துவது தனது வளைகுடாப் போருக்கு குந்தகம் விளைவிக்கும் என்கின்ற காரணத்தினால் மறுபடியும் விடுதலைப்புலிகளை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆசியப்பிராந்தியத்தில் இலங்கைத்தளத்தை தன்வசம் வைத்திருக்க முடியும் என்ற பல வருடங்களின் நோக்கத்தை தற்பொழுது பிரதிபலிப்பதாக அமெரிக்க அரசு செயற்பாடுகள் அமைகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசை, அதனுடைய செயற்பாடுகளை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அமெரிக்கரசு பகிரங்கமாகவே அந்நாட்டில் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்புக்களைச் தடைசெய்வதனூடாக வெற்றி காணலாம் என எண்ணுகிறது. இது முற்றிலும் தவறானதொரு விடயமாகும்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர்கள் அமெரிக்க நகரிலிருந்து தற்பொழுது தாயகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பவற்றையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் எவ்வாறான செயற்பாட்டை அமெரிக்கா அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்படுத்தியதோ அவ்வாறு செயற்படுத்தவே தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஜெனிவாத் தீர்மானத்தின் மூலம் தமிழ்மக்களுக்கான தீர்வுகள் எட்டப்படாது விட்டால் நிச்சயமாக அமெரிக்காவிலிருந்தே தமிழீழ விடுதலைப்புலிகள் நேரடியாக களமிறக்கப்படுவார்கள். இதற்கான முன்நடவடிக்கைகளை இலங்கையரசு எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.