அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

99

 

அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21வயதான அர்ஷியா ஜோஷி என்ற இளம்ப் பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE