இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது.
உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்;டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக வாக்களித்ததன் பின் புலமும், ஆதரவு தெரிவிக்காமல் விலகிய பின்புலமும் புலப்படுகின்றது.
அடிப்படைக்காரணங் களாக ராஜீவ்காந்தியின் கொலை மற்றும் அவர்களுடைய பொருளாதாரங்களைக் கொண்டே இந்திய அரசு பின்வாங்கியதாக பலர் கூறுகின்றார்கள். இலங்கை இனப்பிரச்சினை மீது ஆரம்ப கட்டத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் தற்பொழுது தட்டிக்கழித்துள்ளது எனலாம். போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைக்கண்டு இந்தியாவிலும் தனி நாடு கோரிவிடுவார்கள் என்கின்ற காரணத்தினால் ஒட்டுமொத்தத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதில் குறியாக இருந்தது இந்திய அரசு.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கூட இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தங்களால் முடிந்தளவு உதவி, ஒத்தாசைகளை வழங்கியிருந்தனர். இந்தியாவின் அடுத்தக்கட்ட நிலைப்பாடும் கூட பிரபாகரனை அழித்தொழிக்கவேண்டும் என்பதே. ஒவ்வொரு நாடுகளும் தமக்கென ஒரு கொரில்லா அமைப்பை வைத்திருப்பது வழமையானதொன்று. இக்கொரில்லா அமைப்பை வைத்திருப்பதன் நோக்கம் அவர்களுடைய அரசியலையும், உலக நாடுகளின் நிதியையும், அத னோடு பெறப்படுகின்ற சலுகைக ளையும் பெற்றுக்கொள்வதற்காகவுமே. இதனை அடிப்படையாக வைத்துப்பார்க்கின்றபொழுது, அமெரிக்க அரசானது இந்தியாவின் ஊடாக இலங்கை மீது தனது ஆதிக்கங்களை செலுத்துவது இலகுவானதாகும்.
நேரடியாகவே இலங்கை மீது தலையிடுகின்றபொழுது பல நாடுகளின் எதிர்ப்பை சந்திக்கவேண்டி ஏற்படும். அதனை தவிர்க்கும் நோக்கத்தினூடாகவே அமெரிக்க அரசு இந்தியாவை ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க பணிப்புரை விடுத்தது என லாம். அமெரிக்க அரசின் நீண்ட தூர இலக்கில் இலங்கை திருநாட்டை எப்படியாவது தனது காலணித்துவ நாடாக மாற்றியமைக்க ஏதுவான நடவடிக்கைகளை 5 வருடங்களுக்கு முன்பதாக இருந்தே செயற்படுத்தி வருகிறது. ஜெனிவாத் தீர்மானம் நடைபெறுவதற்கு முன்னர் நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பு நியூயோர்க்கில் இரகசிய மான இடமொன்றில் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் இலங்கையில் ஆட்சி யொன்றை நிறுவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலை யிலேயே இந்த நாடுகடந்த தமிழீழ அரசு இயங்கிவருகின்றது. இதற்கு உறு துணையாக விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட மொத்தமாக 28 அமைப்புக் கள் இயங்கிவருகின்றன. இவர்களின் மையப்பொருள் என்னவென்றால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களை துரிதகதியில் வளமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்பதேயாகும்.
அவ்வாறான செயற்பாடுகளை செய்வதனூடாக காலப்போக்கில் யுத்த மற்ற சூழல் ஒன்று வருவதற்கு இடமில்லை என்பதை அமெரிக்கா ஏற்கனவே நாடுகடந்த தமிழீழ அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளது. இதனை மையமாகக் கொண்டே தற்பொழுது மிகத்தைரியமாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசு செயற்படுகிறது. இது இவ்வாறிருக்க இலங்கையரசுடனும் அமெரிக்கா நட்புறவை பேணிவருகின்றது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஒரு செயற்பாடாகவே அமெரிக்க அரசு இலங்கை விவகாரத்தில் தனது செயற்பட்டு வருகின்றது.
அதிலும் முக்கியத்திட்டம் என்னவென்றால் உலகப்போர் என்று வருகின்றபொழுது, இலங்கையின் தளம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பல்வேறு தசாப்த காலமாக இதற்கு தடையாக இருந்தது விடுதலைப்புலிகளே. எனவே தான் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை முற்றாக அழிக்க அமெரிக்க அரசு கூடுதலான உத விகளை வழங்கியுள்ளது. இவ்வாறான உதவிகளை வழங்கிவிட்டு தற்பொழுது இலங்கையரசிற்கு எதிரான சில நடவடிக்கைகளில ஈடுபடுவதென்பது நம்பவைத்து தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கும் செயலாகவே கருதப்படுகின்றது.
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவின் ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறை வேறியது.
தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித்தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது முக்கிய திருப்பமாக கருதப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
இதுபற்றி இந்தியாவுக்கான நிரந்தர பிரதி நிதி திலிப் சின்ஹா கூறியதாவது:
சர்வதேச புலனாய்வு விசாரணை ஏற்பட்டால் அழைக்காமலே நுழையும் நிலைமையை இந்த தீர்மானம் மூலமாக ஐ.நா. கவுன்சில் திணித்துள்ளது. எதிர்பார்ப்புக்கு மாறான பலனே இதில் கிடைக்கும். மேலும் இது நடை முறைகளுக்கும் ஒத்துவராததாகும்.
2009, 2012, 2013ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போல் அல்லாமல், இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை ஆராயவும் மதிப்பிடவும் கன்காணிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுத்திருக்கிறது. இது இலங்கையின் இறையாண்மையை பலவீனப்படுத்தும்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது, தமிழர்கள் உட்பட அங்குள்ள எல்லா சமூகத்தவருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளது என்பதே இந்தியாவின் கருத்தாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதனால் இலங்கை இந்தியாவுடனான நட்புறவு சீர்குலைந்து போகவில்லை. அவர்களுடைய பொருளாதார செயற்பாடுகள் வழமைபோல சீராக நடைபெற்றது. ஆங்காங்கே ஒருசில வன்முறைகள் நடைபெற்றாலும் கூட இலங்கையரசின் நட்புறவில் இருந்து இந்திய அரசு தமிழ் மக்கள் மீது இரட்டைவேடம் காட்டுகிறது.
மனித உரிமைகளை பாது காத் திடவும் மேம்படுத்திடவும் இலங்கை மேற்கொள்ளும் சொந்த முயற்சிகளுக்கு பங்களிப்பு தருவதா கவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முயற்சிகள் இருக்கவேண்டும். இந்த கவுன்சிலுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. கடந்த ஆண்டில் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திலிப் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
2009ம் ஆண்டிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக ‘இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை, மனித உரிமைகள்’ தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 2009, 2012, 2013ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இதற்கிடையே, தீர்மானம் நிறை வேறியதை அடுத்து இலங்கையில் நடந்த போர்க்குற்றப் புகார்கள் தொடர்பாக விசா ரணை தொடங்கியது. விசா ரணை நடப்பதை தடுத்திட இலங்கை மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
2002ம் ஆண்டுக்கும் இறுதிப் போர் தொடுத்து விடுதலைப்புலிகளை வீழ்த்திய 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நவிபிள்ளையின் அலுவலகம் இனி விசாரிக்கும். ‘இலங்கையில் நடந்த போரி ன் போது இருதரப்பும் நடத்தியதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் பற்றி விரிவாக புலனாய்வு செய்ய வேண்டிய தருணம் இது’ என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நம்பி ஜனாதிபதி அவர்கள் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதானது ஏமாற்றமடையும் ஒரு செயலாகும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருந்த பகைமையை சரிப்படுத்துவதற்காகவே இந்த ஜெனிவா தீர்மானத்தில் அமெரிக்க h செயற்பட்டது. ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததன் எதிரொலியாக, இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவ ரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் விஜயானந்த ஹெராத் கூறியதாவது: வெளிப்பார்வைக்கு இந்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிராலி என்கின்ற வகையில் தற்பொழுது காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை நசுக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும். காலப்போக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்நிய நாடுகளின் தலையீடுகள் இல்லாமல் தற்போதைய அரசு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாக இருந்தால் சர்வதேச மட்டத்திலான அதிகாரங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தினை வழங்குவதனூடாக இந்த நாட்டையும், வளங்களையும் தக்கவைத்துக்கொள்ளலாம்.
அதனை விடுத்து மீண்டும் போர் ஆரம்பிக்கப்போகின்றது. இந்திய அரசின் அனுசரணை யின்றி ஏனைய நாடுகளினால் ஒன்றுமே செய்யமுடியாது என்கின்ற நிலைப்பாட்டில் இலங்கையர சாங்கம் இருக்கின்றது. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அது உண்மையானவிடயம். ஜெனிவாத் தீர்மானம் என்பது வெறுமனே இந்தியா எடுத்த தீர்மானம் அல்ல.
இதற்கு பக்கபலமாக அமெரிக்கா செயற்பட்டது. வெளிப்படையாக பார்க்கின்றபொழுது இந்தியாதான் அவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன என்பதுதான் உண்மையானவிடயம்.