அமெரிக்காவை தொடர்ந்து மோடிக்கு சீனாவும் பாராட்டு

619

“இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது.
சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான, “குளோபல் டைம்’ பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளதாவது: தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில், சீனாவுடனான இணக்கமான பொருளாதார கொள்கையை ஏற்படுத்த கூடிய தலைவர்களில், மோடி முக்கியமானவர்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், குஜராத்தில் சீன நிறுவனங்கள் அதிகளவில் அங்கு முதலீடு செய்துள்ளன. குஜராத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, முதலீடுகளை ஊக்குவிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டது போன்ற விஷயங்களில், அவரின் நிர்வாகத் திறன் வெளிப்பட்டது. மோடி தலைமையில், இந்தியாவில் புதிய அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்கும். எல்லை பிரச்னைக்கும் சுமுக தீர்வு காணப்படும். இவ்வாறு, அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

SHARE