அமெரிக்கா இலங்கையில் தளம் அமைக்கவே மஹிந்தவுடன் பேரம் பேசுகிறது

837

மாதங்கள் என்ற அளவு நாட்களாகக் குறைந்து கொண்டு வரும் நிலையில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்காகப் பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா – பிரிட்டன், மனித உரிமை ஆணையாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கைக்குள்ளிருக்கும் மனிதஉரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள், இலங்கை அரசு என்று பல தொகுதிவாரியான பகுதியினர் இக்கூடடத்தொடரை முகம்கொடுக்க தயாராகி வருகின்றனர்.

அவ்வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளையினால் பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்று தயாராகியுள்ளது. இதனை இவர் எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படமுன் ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் இலங்கை இராணுவத்தினர் குற்றம் இழைத்தாக குறிப்பிடக்கூடிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அறுபது சாட்சியாளர்கள் அடங்கியதாக இவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அதுபோல இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜன நாயக மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உட்பட சில கட்சிகள் தமது அழுத்தத்தை வழங்கி வருகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியிலான ஒரு தீர்வை எதிர்பார்க்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கு பலம் சேர்த்து வருகி றது. முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள யோசனை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளது. இங்குள்ள தமிழ்மக்கள் அனைவரும் சர்வதேச ரீதியி லான தீர்மானத்தை எதிர்பார்க்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்றாவது அறிக்கை தயாராகியுள்ளது. அமெரிக்க அரசின் சிரேஷ்ட அதிகாரி நிஷா தேசாய் பிஸ்வால் முதற்கொண்டு அவருக்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஏனைய உயர் அதிகாரி களின் இலங்கை விஜயங்களின் அடிப்படையிலும் ஏற்கனவே பிரேரிக்கப்பட்டிருந்த இரு அறிக்கைகளின் மேற்கோள்களினடிப்படையிலும் மூன் றாவது அறிக்கை அமையப்பெற்றிருக்கிறது.

இலங்கையில் ஈழப்போரின் இறுதிநாட்களில் சிவில் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டறிய நம்பிக்கையானதும் சுயாதீனமான துமான விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவுரை ஏலவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது அறிக்கையினூடாக அது அழுத்தமாக மாற்றம் பெற்றிருக்கிறது. இது குறித்து அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவே அமெரிக்க அரசின் சிரேஷ்ட பிரதிநிதி உட்பட பலர் வந்திருந்தனர். இவர்களில் மிக அண்மையில் வந்திருந்த அமெரிக்காவின் சிரேஷ்ட பிரதி நிதி நிஷா தேசாய் பிஸ்வாலின் விஜயம் மிகமுக்கியமான காலத்திற்கு ஏற்ற செயற்பாடாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவரது விஜயத்தை வைத்து பல உள்ளுர், வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் ஆசி ரியர் தலையங்கம் வரைந்துள்ளமை அவரது பயணத்தின் முக்கியத்துவத்தை காட்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அது தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.கொல்லப்பட்டவர்களில் அதிகள வானவர்கள் அரசாங்கத்தின் ஷெல் வீச்சு தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. மாத்திரமின்றி அந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு தடையேற்படுத்தியது. இதற்காக இதுவரை இரண்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது மூன்றாவது யோசனைக்கான நேரம் வந்து விட்டது.

இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசார ணைப் பொறிமுறைமை ஒன்றை அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் உருவாக்க வேண்டுமென அமெரிக்கப் பாராளமன்றம் வலியுறுத்தியுள்ளது. அரசி யல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற தரப்பினரை தடையின்றி பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, பொருளா தாரம், அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் போர் முடிந்து 5 வருடங்கள் கழிந்துள்ளது. ஆனால் பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. அபிவிருத்தி, மீளக்குடியேற்றல், காணா மல் போனோர் தொடர்பிலான விசாரணை, வடக்கில் தொடர்ந்தும் நிலைத்திருக்கும் இராணுவம், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலை யீடு, ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்களுடன் நில அபகரிப்பு தொடர்பிலான பொறுப்புக்கூறலில் அரசாங்கம் முறை யான நடவடிக்கைகளை முழுமையாக இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி சர்வதேச அமைப்புக்கள், நாடுகள் கேள்வி எழுப்பினால் மிகநீண்ட காலப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட எடுத்த காலஅளவைவிட அவற்றைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட காலம் தேவை என்று மறுபடியும் மறுபடியும் கூறி வருகிறது. பொறுப்புக்கூறலுக்கான காலஅவகாசம் தீர்ந்துபோயுள்ள நிலை யில் அரசாங்கம் வடக்கில் ஒரு பகுதி மக்களை குடியமர்த்தியுள்ளது. குறிப்பிட்டளவு இராணுவத்தினரை வெளியேற்றியுள்ளது. சிறியளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மற்றும் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியுள்ளது. இவற்றை விட வேறு என்ன செய்திருக்கிறது? இன்னும் முகாம்களில் வாழும் மக்கள் உள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மாறாக காணா மல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பெருமளவில் காணி அபகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அபிவிருத்திப்பணி என்ற போர்வையிலும் குடியேற்றம் என்ற போர்வையிலும் மிகப்பெரியளவிலான அபகரிப்பு முயற்சி முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா என்று பல இடங்களில் நடைபெறுகின்றது. இப்படியான நிலையில்தான் சர்வதேச விசார ணையைக் கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படி பல பக்கங்களிலிருந்தும் எழுப்பப்பட்ட கேள்விகள் எதிர்ப்புக் குரல்கள் போன்றவற்றை கருத்தில் எடுத்தே இறுதித்தீர்மானம் எனும் நிலைப்பாடு இன்று உருவாகியுள்ளது. பொறுப்புக்கூறல் எனும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது போனால் பின்னாளில் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு சர்வதேச சமூகமே அங்கீகாரம் வழங்கியதாக கருதப்படவேண்டிய தேவை உருவா கும். இதனால்தான் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான பொறுப்புக் கூறலை கோரி நிற்கும் இலங்கையர்களுடன் சர்வதேசமும் அணிதிரண்டுள்ளது.

இப்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மை நில வும் ஒரு நாடாகத்தான் இலங்கை பார்க்கப்டுகிறது. உள்நாட்டுப்பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் சர்வதேச தலை யீடு என்பது இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கலாம் ஆனால் தற்போதைய நிலையில் அவை இலங்கையில் நல்லிணக்கத்திற்கு எந்தளவு சாதகமானவை என்ற கேள்வியும் எழாமலில்லை.

உண்மையில் பார்க்கப்போனால் இலங்கை விவாகாரம் தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேசம் அக்கறை கொண்டிருந்தாலும் இலங்கையில் தளமமைக்கும் முயற்சியில் தான் அமெரிக்காவின் முழுக்கவனமும் இருக்கிறது. அதற்காக அமெரிக்கா இலங்கை தொடர்பாக பிரேணையொன்றை சமர்ப்பித்தாலும் அது போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை கோரும் பிரேரணையாகவே இருக்காது என்றுதான் பலரும் கூறுகின்றனர்.

ஆசிய பசுபிக் வலயத்தைப் பொறுத்தவரையில் பல நாட்டு கடல் சூழல் அமைப்பைப் பார்க்கின்ற போது கரையோரமாக போர்க்கப்பல்களோ கனரக கப்பல்களையோ தரித்து வைக்க முடியாது. ஆசியப்பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் ஒரு இயற்கையான துறைமுகத்தை (திருகோண மலை) கொண்டது இலங்கை. இதனைக் குறிவைத்தே அமெரிக்கா தனது கடற்படைத் தளங்களை அமைத்துக்கொள்ள போர்க்குற்றம் என்ற துருப்புச்சீட்டை இலங்கை அரசுக்கு எதிராகக் கையில் எடுத்துக்கொண்டு தனக்குரிய விடயத்தை இலங்கையரசு உரிய முறையில தரத்தவறினால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து இன்னொரு ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கிலும், பிரபாகரன் இல்லாது வேறோரு தலைமையின் கீழ் போராட்டத்தை தலைதூக்கச் செய்வதிலும் அமெரிக்க அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகி றது. சீனா பாகிஸ்தானின் வல்லாதிக்கம் இலங்கையில் காணப்பட்டு வருகின்ற போதிலும் ஸ்திரமான இராணுவ தளங்களை அமைப்பதற்கு இரு நாடுகளும் இலங்கை அரசிடம் கேட்கவில்லை. ஆனால் அமெரிக்கா மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை அதனோடு மட்டும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வருகிறது. தலைக்கு மேல் வெள்ளம ;வருவதற்கு முன் மஹிந்த ராஜபக்ஷ அணைகட்டவேண்டும். இல்லையேல் தலையோடு போகுமே தவிர தலைப்பாகையோடு போகாது. இந்தியா, சீனா நாடுகளின் இலங்கை வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் 30, 40, 50 வருட ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுடைய அபிவிருத்திப் பணிகள் வாகன உதிரிப்பாகங்கள், வாகனங்கள் ;போன்ற சமாச்சாரங்கள் நடந்து வருகின்றன.

விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியுற்றதோ அல்லது முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்றதோ அமெரிக்காவுக்கு தெரியாது என்று சொல்வதற்கில்லை. அனைத்து நாடுகளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது அமெரிக்கா மௌனம் சாதித்தது. தற்போது ஏனைய நாடுகள் எதிர்ப்பைத் தெரிவிக்க அமெரிக்கா எதிர்க்கிறது. அரசியலில் எல்லாம் சகஜம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பயமுறுத்தி தன்னுடைய வேண்டுகோளுக்கு இசைவுபடுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதைத்தவிர தமிழீழ விடுதலைப்புலிகள் மீதோ அதன் தலைவர் பிரபாகரன் மீதோ பொதுமக்கள் மீதோ கரிசனை காட்டுவது போன்ற பாசாங்கை அமெரிக்கா ஏன் காட்டிவருகிறது? சர்வாதிகாரியான அமெரிக்கா தான் கூறும் விடயங்களுக்கு செவிசாய்க்காவிட்டால் ஏனைய நாடுக ளான ஜேர்மனி, ரஷ்யா, சிரியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஈரான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நடந்த நிலை மைதான் இலங்கைக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

SHARE