அமெரிக்க – சீன ராணுவ தலைமைத் தளபதிகள் சந்திப்பு

551

 அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ராணுவ தலைமைத் தளபதிகள் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர்.

அமெரிக்க ராணுவ கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்டின் டெம்ப்ஸி மற்றும் சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி ஃபாங்க் ஃபெங் ஹூய் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் பிராந்தியப் பிரச்சினைகள் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்கரை விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பசிபிக் கடல் பகுதியில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு சீனாவுக்கு, அமெரிக்க ராணுவக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்டின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இருநாடு ராணுவ தலைமைத் தளபதிகளும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மார்டின் கூறுகையில், இருநாடுகளுக்கும் இடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் மோதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்கு இந்தச் சந்திப்பு உதவியுள்ளது என்ரார். இது குறித்து சீன ராணுவ தலைமைத் தளபதி ஃபாங்க் கூறுகையில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான ராணுவ உறவில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் இருநாட்டு மக்களும் பயனடைவார்கள். இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலையான வளர்ச்சி மற்றும் தன்மை ஆகியவை இந்த சந்திப்பின் மூலம் ஏற்படும் என்றார்.

 

SHARE