அமெரிக்காவில் வசிப்பவர், இந்திய வம்சாவளிப்பெண் விஜி முரளி. இவர் அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தின் தலைமை தகவல் அலுவலர் மற்றும் தகவல், கல்வி தொழில்நுட்ப துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி புதிய பொறுப்பை ஏற்க உள்ள விஜி முரளி, ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து, 1975-ம் ஆண்டு உயிரியல் மற்றும் வேதியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும், பின்னர் 1977-ம் ஆண்டு முதுநிலை பட்டமும் பெற்றார்.
அதே பல்கலைக்கழகத்தில் உள்ள மண்டல ஆராய்ச்சி கூடத்தில் சேர்ந்த விஜிமுரளி, கடந்த 1981-ம் ஆண்டு கரிம வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.