அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள எலிப்ஸ் பூங்காவில் நேற்று முன்தினம் புதன்கிழமை தனக்குத் தானே தீ வைத்துக் கொணடு தீப்பந்தமாக எரிந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ வைத்துக் கொண்ட குறிப்பிட்ட நபர் உடலில் பரவிய தீயுடன் அந்தப் பூங்காவில் நடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த இரகசிய சேவை உத்தியோகத்தர்கள் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தி அவரது உடலில் பரவிய தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட நபர் தீயிலிருந்து பாதுகாப்பை வழங்கும் ஆடையை அணிந்திருந்த போதும் அவரது உடலின் 85 சதவீதமான பகுதியில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின்போது அந்நபருக்கு அருகிலிருந்த சந்தேகத்துக்கிடமான பொதியொன்றும் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள அந்நபரது உடல் நலம் கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகிறது.