அமைச்சருக்காக காத்திருக்கும் அசின் படம் 

523


மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி கால்ஷீட் தராததால் அசின் நடித்துள்ள இந்திப் படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் நிற்கிறது.இந்தி சீரியல்களில் நடித்து வந்தவர் ஸ்மிருதி இரானி. சில படங்களிலும் நடித்துள்ளார். அபிஷேக்பச்சன், அசின் நடித்துள்ள ‘ஆல் இஸ் வெல்’ படத்திலும் நடித்து வந்தார். படத்தின் ஷூட்டிங் பாதியில் இருக்கும்போது பா.ஜ.சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். அமைச்சர் ஆனதால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 3 மாதமாக அவர் கால்ஷீட் கிடைக்காததால் ‘ஆல் இஸ் வெல்’ பட ஷூட்டிங் தாமதமாகிறது. இதுபற்றிப் படக்குழு, ‘கிளைமாக்ஸ் காட்சி பாக்கி இருக்கிறது. இதில் எல்லா நடிகர்களும் பங்கேற்க வேண்டும். ஸ்மிருதி இல்லாமல் எடுத்தால் மொத்தப் படத்தையே ரீஷூட் பண்ண வேண்டும் என்பதால் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளது

 

SHARE