கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கூட்டணியை கட்டியெழுப்ப உதவியவர்கள். அவர்கள் படித்த முக்கியமான நபர்கள்.
ஏதேனும் ஒன்றை சுட்டிக்காட்டும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அவர்கள் சுட்டிக்காட்டுவதை ஆராய்ந்து பார்க்கும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது.
இந்த அமைச்சர்கள் கோபத்தில் இவற்றை கூறவில்லை. ஆளும் கூட்டணியில் தண்ணீர் நிறைந்த பின்னர் சத்தமிடும் தவளைகள் போன்றவர்கள் இல்லை. மனிதத் தன்மை பற்றி பேசும் நபர்களே உள்ளனர்.
யாருடைய கருத்துக்களையும் கேட்டு அவற்றில் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள இயலுமை மக்களுக்கு உள்ளது.
கௌதம புத்தரின் சாசன காலம் முடிந்து மைத்திரி புத்தரின் சாசன காலம் உருவாகும் வரை இந்த நாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியே ஆட்சி செய்யும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.