அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார்.

443

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மோசடி செய்தே தேர்தல்களில் வெற்றியீட்டினார் என அவரது சகோதரரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆனந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி புதிய தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அலுத்கமகே ஓர் நன்றி கெட்டவர். ஏறிய ஏணியை உதைத்து விட்டார்.

அமைச்சரின் வெற்றிக்காக இரத்தம் வியர்வை சிந்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அவர் விரட்டிவிட்டார்.

கிரமமாக ஒவ்வொருவராக உதவி செய்தவர்களை அவர் உதறித் தள்ளிவிட்டார். இறுதியில் நிழலைப் போன்று இருந்த மனைவியையும் விரட்டிவிட்டார்.

அதிகார மோகம் மற்றும் தலைக்கணத்தினால் அமைச்சர் அலுத்கமகே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்.

நாவலப்பிட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றியீட்டி வந்தது.

அமைச்சர் அலுத்கமகே தேர்தல் வன்முறைகள் மற்றும் மோசடிகளின் மூலமே ஆளும் கட்சியை வெற்றியடையச் செய்கின்றார்.

இதனை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நான் தெரிவிக்கின்றேன்.

நாவலப்பிட்டி சார்க் கிராமத்தில் உரியவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை.

வர்த்தகர்கள் உள்ளிட்ட அமைச்சருக்கு தெரிந்தவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தரகுப் பணம் இல்லையென்றால் அபிவிருத்தி கிடையாது. தரகுப் பணம் கிடைக்காத சில பாலங்கள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாடு அமைச்சரின் கைகளிலேயே இருக்கின்றது.

ரயில் திணைக்களக் காணிகளை அமைச்சா் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டார்.

அமைச்சருக்கு தேவையான வகையிலேயே பொலிஸார் செயற்படுகின்றனர் என ஆனந்த அலுத்கமகே கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

SHARE