வேலியை சேதப்படுத்திய யானைகள்

188

அம்பாறை வனப் பகுதியில் வாழ்கின்ற யானைகள்  அம்பாறை  உஹானா- கலாபிடிகல மத்திய மகா வித்தியாலயத்தின் வேலியை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைக் கூட்டம் நேற்று இரவு பாடாசலையின் பாதுகாப்பு வேலியை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த பாதுகாப்பு வேலியானது 26 இலட்சம் ரூபா செலவில் அண்மையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் நெல் மூடைகளை குறித்த பாடசாலை மைத்தானத்தில் சேமித்து வைத்திருந்தபோது நேற்று இரவு யானைகள் சுமார் 20 மூடைகளை சேதமாக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி கிராமத்திற்குள் வரும் யானைகள் தற்போது ஏராளமான நெல்வயல்களை தேப்படுத்தியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE