பாறுக் ஷிஹான்
அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா , அஸ்ரப் தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
விசேட அதிதிகளாக, நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பொறுப்பாளர் சம்சுல் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.எம்.ஆரீப் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அதம்பாவாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வழங்கினார்.
இறுதியாக பாதைகள் மற்றும் வெற்று வளவுகளில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றும் பணியையும் அதிதிகள் தொடக்கி வைத்தனர்.