ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்பிலான மாற்றங்களை தெளிவாக அவதானிக்க முடியும்.
ஆளும் கட்சிக்குள் உள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஊவாவின் முதலமைச்சருக்கு எதிராக ஏற்கனவே சில ஆளும் கட்சி வேட்பாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
அராஜக அரசாங்கத்தின் தோல்வி ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
மிகவும் நியாயமற்ற முறையில் அமைச்சுக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது.
அரசாங்க சொத்துக்களை சொந்த சொத்துக்களாக கருதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இது ஓர் வகையிலான லஞ்சமாகும்.
மக்கள் எதிர்ப்பு என்ற தீயினால் எரியப் போகும் இந்த அரசாங்கத்தை காப்பாற்ற மொத்தக் கடல் நீரையும் பயன்படுத்தினாலும் போதாது என ஹேமகுமார நாணயக்கார சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.