அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

112

 

அரச அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதமாக வேலை செய்கின்றனர். வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை பணியில் இணைத்துக்கொள்ள சொல்கின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அப்படியே இருக்கும்

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”அரச அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் மாற போகின்றது என்று. இல்லை அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும்.

சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.

அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான்.

சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

SHARE