அரச பேருந்தின் சாரதியை வழிமறித்து தாக்கிய தனியார் பேருந்து சாரதி!

118

 

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு வந்த யாழ்ப்பாணம் – வவுனியா வழி தட தனியார் பேரூந்து, பேருந்தினை பாதையில் நிறுத்தி விட்டு இ.போ.ச பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமையுடன் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்தினருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

வாய்த்தர்க்கம்
அதன் பின்னர் இரு தரப்பினருக்கிடையே வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது.

நேரசூசி பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன், காவல்துறையினர் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE