அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

530

தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜெயந்த பண்டார, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் பயன்படுத்தப்படுகின்றது என்றும் இதற்கு அரச மருத்துவமனைகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறினார்.

இன்சுலின் பெறுவதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பல நீரிழிவு நோயாளிகள் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான இன்சுலினை அவர்கள் தபால் மூலம் வீடுகளுக்கு பெற்றுக்கொள்கின்றனர் என்றும் கூறினார்.

எனவே இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறும் அவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE