அரச வெசாக் தின வைபவம் 2 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

246

அரச வெசாக் தின வைபவம் இம்முறை 2 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பௌத்த ஆலோசனை சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானித்துள்ளது.

பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில்,

கொள்கை வழிபாடுக்கு முக்கியத்துவம் வழங்கி இம்முறை அரச வெசாக் வைபவம் கொண்டாடப்படும் என்றார்.

எந்தவொரு கண்காட்சி கூடகங்கள் இதில் இடம்பெறாது. இம்முறை வெசாக் தினத்தை கொண்டாடுவதில் பொதுமக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE