படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, காதல் வலிமையானது, களங்கமின்றி அதில் வெற்றி காண வேண்டும். ஒரு இளம் பெண்ணின் வித்தியாசமான போராட்டம் தான் ‘திருந்துடா காதல் திருடா’ படத்தின் கதை என்று கூறினார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை பார்க்க சென்றவர்கள். அவர்களுக்காக அங்கே ஒரு நேர்முக தேர்வு நடத்தினோம். அதில் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். அதில் 40 பேரை மட்டும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளோம். இப்படத்தின் நாயகன் அங்குள்ள தமிழ் எப்.எம்.ல் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்தார். இந்த படத்திலும் அவர் ரேடியோ ஜாக்கியாகவே நடிக்கிறார்.
இந்த படத்தை துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல்-குவைன், ஃயூஜேரா போன்ற அரபு நாடுகளில் 60 நாட்கள் படமாக்கியுள்ளோம். அதில் ராசல்கைமா என்ற இடத்தில் மட்டும் 25 நாட்கள் படமாக்கினோம். அடிப்படை வசதிகள் இல்லாத அந்த ஊரில் ரொம்பவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம். இந்த படத்தை மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு கஜல் பாடலும் உண்டு. இந்த பாடலை பாடகர் பிரசன்னா 8 மணி நேரம் கஷ்டப்பட்டு பாடிக் கொடுத்தார். கிளப் டான்ஸ், பெல்லி டான்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த படத்தில் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்திற்கு சணல் தோட்டம் ஒளிப்பதிவு செய்கிறார். ரஞ்ஜித் மேலேபாட் இசையமைக்கிறார். நியூ டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது. டாக்டர் கிருதியா, ஸ்ரீபாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். விரைவில் வெள்ளித்திரையில் தோன்ற இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.