கற்க கசடற என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி ராய். தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது முருகதாஸ் ஹிந்தியில் இயக்கும் அகீரா என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து லட்சுமி ராய்க்கு இரண்டாவது ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தீபக் ஷிவ்தாஸனி இயக்கும் ஜுளியா 2 என்ற த்ரில்லர் படத்தில் லட்சுமி ராய் மெயின் வேடத்தில் நடிக்கிறார். இப்படம் லட்சுமி ராய்க்கு 50வது படமாகும், அதோடு ஹிந்தியில் நடிக்கும் முழு படம்.