அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபை வளாகத்திற்குள் வைத்து இன்று பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அண்மையில் தொடுக்கப்பட்ட வழக்கினை காரணம் காட்டியே பொலிஸார் அவரை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது.
சாவகச்சேரி நகரசபை அதிகாரிகளுடன் வர்த்தக நிலைய குத்தகை தொடர்பாக கலந்துரையாட வந்த நிலையிலேயே அவர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
அர்ச்சுனாவை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெரிய ஜனநாயகவாதியாக காட்டி பதவிக்கு வந்த அனுர அரசாங்கம் சாதாரண ஒரு வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து அர்ச்சுணாவை கைது செய்திருக்கிறது.
கூடவே DCC மீற்றிங்கில் தன்னை முட்டாளாக்கும் கேள்வியை அர்ச்சுணா கேட்பான் என்ற பயமும் அனுரவை இப்படி திட்டம் போட வைத்துள்ளது.
இந்த நீதிமன்ற கடிதம் அதை உறுதிப்படுத்துகின்றது.