பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும்.
அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் முதல்வன், அர்ஜுனை தாண்டி மனிஷா கொய்ராலா நாயகியாக நடிக்க ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படம் அர்ஜுன் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
முதல் சாய்ஸ்
ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் தேர்வு செய்த நடிகர்களே கமிட்டாவார்கள் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. நிறைய மாற்றங்கள் நடந்துதான் ஒரு படம் வெளியாகும், அப்படி இப்போது முதல்வன் படத்தை பற்றிய தகவல்கள் தான் வலம் வருகிறது.
முதலில் முதல்வன் படத்தை எழுதும் போதே நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் இயக்குனர் எழுதியுள்ளார்.
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை நிராகரிக்க அடுத்து விஜய்யிடம் கதை சென்றுள்ளது, அவரும் நிராகரிக்க அடுத்து கமல்ஹாசனிடம் கதை சென்றுள்ளது.
அவர் அந்த நேரத்தில் ஹேராம் படத்தை இயக்கி, நடித்து வந்ததால் அப்போதைக்கு அவராலும் நடிக்க முடியாமல் போனது.
பின் கடைசியாக தான் அர்ஜுனிடம் சென்றுள்ளது, படத்தை ஓகே செய்து நடித்தார், வெற்றியும் கண்டார்.