அறிமுகமாகின்றது 4G தொழில்நுட்பம்: மொபைல்களில் இனி அசுர வேகம்தான்

322

 

தற்போது உள்ள இணைய வலையமைப்பு சேவை தொழில்நுட்பங்களில் அதி வேகம் கூடியதாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

இத் தொழில்நுட்பத்தில் 150 Mbps எனும் தரவிறக்கம் வேகம் வரை கிடைக்கப்பெறுகின்றது.

ஆனால் தற்போது 360 Mbps வேகத்தில் மொபைல் போன்களிலும் தரவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பத்தினை ஐக்கிய இராச்சியத்தில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் EE நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

Cat 9 LTE எனும் இப் புதிய தொழில்நுட்பத்தினை அனைத்து கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியாது.

எனினும் HTC M10, Galaxy S7, S7 Edge மற்றும் Note 7 போன்ற நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளில் மட்டுமே கிடைக்கப்பெறக்கூடியதாக இருக்கின்றது.

முதன் முறையாக EE நிறுவனம் லண்டன், பேர்மிங்ஹாம் மற்றும் மான்ஸ்செஸ்டர் ஆகிய பகுதிகளுக்கு இவ் வருட இறுதிக்குள் இச் சேவையினை வழங்க தீர்மானித்துள்ளது.

 

SHARE