ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட LG நிறுவனம் G5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெரா, 4K வீடியோ பதிவு செய்யக்கூடிய 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2800 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. |