அறிவியலில் ஆர்வம் குறையும் பெண்கள்: அதிர்ச்சியான காரணங்கள்

396
திறமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டு என்று கருதினாலே, அது அறியாமை, பிற்போக்குத்தனமாக பார்க்கப்படும் உலகத்தில் நாம் வாழ்கிறோம்.ஐரோப்பிய ஆணைக்குழு நடவடிக்கை

ஐரோப்பாவில் பெண்களிடம் குறிப்பாக, இளம்பெண்களிடம் அறிவியல் ஆர்வம் குறைந்துள்ளது. இந்த போக்கை மாற்ற, ஐரோப்பிய ஆணைக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவிலும் அதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதை உத்தேசித்தே, பெண் குழந்தைகளுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட, ஆக்கப்பூர்வமான வழிகளை தேர்ந்தெடுத்து செயல்பட 2012 ல் இருந்து தொடங்கியுள்ளது.

பழங்காலத்திலும் பெண்களுக்கு அறிவியல் வாய்ப்பு

உலகில் வேறு எங்கும் பெண்களுக்கு உரிமை தரப்படாத 11 ம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் பெண்களும் பல்கலைக்கழகத்தில் படிக்க உரிமை இருந்துள்ளது.

அங்கு அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கான முதல் பெண்ணுக்கான நாற்காலியை அலங்கரித்தவர். இத்தாலி பெண் அறிவியலாளர் லாரா பாஸ்ஸி(Laura Bassi) ஆவார்.

கணனி அறிவியலாளர் ஆதா லவலேஸ் டே

’டே’ என்பது பெண் அறிவியலாளர்களை கவுரவிக்கும் சொல். ஆதா லவலேஸ் 1842 ம் ஆண்டில் ஒரு Computer Program ஒரு இயந்திரத்துக்கு எழுதினார். அதுபோல, இதுவரை யாரும் எழுதமுடியவில்லை.

அந்த பெண் அறிவியலாளரை கணனி மேதைகளும், கணிதமேதைகளுமே வியக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்கள் வாழ்ந்திருக்கும் போதும், 150 ஆண்டுகளை கடந்தும் அறிவியல் துறையில் பெண்கள் குறைவாக இருப்பது, அவர்களின் விருப்பமின்மை.

ஆனாலும் அது ஒரு நாட்டின் அறிவியல் தொடர்பான அக்கறையின்மையையும் காட்டுகிறது.

அமெரிக்காவில், 60 சதவீத பெண்கள் இளநிலை பட்டம் பெறுகின்றனர். அதில் 20% கணனி அறிவியல், 20% இயற்பியல், 18% பொறியியல் துறையையும் சார்ந்தவர்கள்.

அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பெண்கள் அறிவியல் துறையில் அதிகம் பங்கெடுக்காததற்கு காரணமாக ஏழு காரணங்களை ஐரீஸ் பொல்லாக் கூறுகிறார்

1. Teasing in a School

பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலுமே கிண்டல் கேலி செய்யப்படுகின்றனர். அதற்கு உதாரணமாக, தான் அறிந்த ஒரு சம்பவத்தை கூறுகிறார்.

ஒரு பள்ளியில் மூன்று பெண்கள் மட்டுமே இயற்பியல் பிரிவில் சேர்ந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணிடம் ஒரு மாணவன் பெண்களுக்கு இயற்பியல் வராது என்று, ஒரு விவாதத்தில் அடித்துக் கூறி அவமானப்படுத்துகிறான்.

ஆசிரியர் தனக்கு ஆதரவாக இருப்பார் என்று அந்த பெண் எதிர்பார்க்கிறாள். துரதிர்ஷ்டவசமாக ஆசிரியர் அந்த மாணவன் செயலை ரசிப்பதாகவே காட்டிக்கொண்டார். இதுபோல கேலி, அவமானங்கள் பெண்களின் ஆர்வத்தை கெடுக்கிறது.

2. A lack of encouragement

பெற்றோர், மற்றும் ஆசிரியர்கள் பெண்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டுவது அவசியமானது.

ஆதா லவலேஸ் அறிவியல் துறையில் இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்த அவருடைய தாய் முக்கிய காரணம். லவலேஸின் தந்தை ஒரு பிரபல கவிஞர் லார்ட் பைரன்.

அவருடைய தாக்கம் தன் மகளுக்கு வந்துவிடாமல் அவர் கொடுத்த மாற்று திசைதான் அறிவியல் ஆர்வம். அது வீண் போகாமல் விஸ்வரூபம் எடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே!

3.Stereotypes

பெண்கள் நிஜமான அறிவியல் உலகில் மிக குறைவாக இருந்தாலும், சினிமாவிலும், தொலைக்காட்டிச நிகழ்ச்சிகளிலும் அறிவியலாளர்களாக நடிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர்.

’Thor’ படத்தில் நாடாலி போர்ட்மேன் இயற்பியலாளராக நடித்துள்ளார். ‘Gravity’ படத்தில் சந்த்ரா புல்லாக் நடித்துள்ளார்.

பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘The Big Bang Theory’ ல் பெண் விஞ்ஞானியாக நடித்தவர்கள் சும்மா வந்து போகிறார்கள். பெண் விஞ்ஞானியல்லாத சாதாரண பெண் பாத்திரங்களில் நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது.

நிஜ வாழ்விலும் பெண்கள் அறிவியல்துறைகளில் சமமாக பங்கெடுப்பது சினிமாவை போல சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் இருக்கும் சமுதாயத்தில் பெண்களும் அறிவியல் துறையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

4. Childcare

பெண்கள் இளநிலை பட்டம் பெற்றுவிட்டாலும், பிறகு அறிவியல் ஆராய்ச்சி போன்ற மேற்படிப்புகளை தொடர முடிவதில்லை.

காலத்தோடு திருமணம் செய்யும் நிர்பந்தம். பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் அதை வளர்ப்பதற்கும் அதிக விடுப்புகள் தேவைப்படுவது தவிர்க்க முடியாதது. இதுவும் பெண்கள் எண்ணிக்கை குறைய காரணமாக அமைகிறது.

பெண்களின் தன்மை அறிந்து போதுமான விடுப்புகள் அளிப்பது அறிவியல்துறைகளில் வழக்கத்திற்கு வரவேண்டும்.

5. Competition

பெண்களுக்கு போட்டி மனப்பான்மையும், அக்கிரமிப்பு செயலும் இயல்பாகவே ஆண்களைவிட குறைவானது.

அதனால், ஆண்கள் ஒரு பாலின வேறுபாடு போட்டி மனநிலையோடு, அவர்களை வெல்ல நினைப்பதும் செயல்படுவதும் பெண்களுக்கு பல வழிகளில் தொந்தரவையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

6. Marginalization

பெண்கள் ஆசிரியர் நிலையிலும், அலுவலக பணிகளிலும் ஆண்களைவிட குறைவாகவே சம்பளம். மடிக்கணனி வசதி, அலுவலக வசதி மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது. இது MIT குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மென்பொருள் வடிவமைப்பாளர்களில், ஆண்களுடைய வருமானத்தில் 80% மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வு 130 நாடுகளில் 15,000 இயற்பியல் துறைகளை ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளது. ’அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பிஸிக்ஸ்’ உட்பட அனைத்து கலாசாரங்களில் உள்ள பணியிடங்களிலும் செக்ஸை தவிர பிற வசதிகளில் ஆண்களுக்கே அனுகூலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

7.Bias

பெண்கள் ஒதுக்கப்படுவதன் விளைவே, ஆண் மற்றும் பெண் சக பணியாளர்களிடமிருந்து ஒரு பெண்ணுக்கு நேரும் பாரபட்சம்.

உதாரணமாக, ஒரு ஆய்வக மேலாளர் பதவிக்கு ஜான் மற்றும் ஜெனிபர் என சம திறமையுடைய போட்டியாளர்கள் வந்தால், அதில் ஜானையே தேர்ந்தெடுத்து அதிக ஊதியமும் வழங்கும் நிலையே தொடர்வதாக பொல்லாக் எழுதியுள்ளார்.

முன்னேற்றம் எதிரில் தெரிகிறது

கல்லூரி அளவில் STEM படிப்பில் 1983 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 10,000 மாணவர்களில், 13 ஆண் மணவர்களுக்கு ஒரே ஒரு மாணவி என்ற விகிதாசரம் இருந்தது.

2007 ம் ஆண்டில் நடந்த அதே போன்ற ஒரு கணக்கெடுப்பில் 4 ஆண் மாணவர்களுக்கு ஒரு மாணவி என்ற அளவில் முன்னேற்றம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அறிவியலில் ,மேரி கியூரி, கல்பனா சாவ்லா போன்ற சில பெண்களின் சாதனை பட்டியலை வைத்துக்கொண்டு, பெண்களும் அறிவியலில் சாதித்துவிட்டனர் என்று பெருமைப்பட்டுக் கொள்வது போதுமானதல்ல.

10 பெண்களில் 7 பேர் அறிவியலை விரும்புகிறார்கள். ஆனாலும், 10 பேரில் 2 பேர் மட்டுமே அதில் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்புகள் அமைவதாக ஆய்வு கூறுகிறது.

விரும்புகிற அனைத்து பெண்களுமே அறிவியல் துறையில் காலூன்ற முடியாமல் போக தடையாக இருப்பது எது என ஆராய்ந்து அதை நீக்கி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமாக பங்குபெறும் எந்த துறையிலும் பாலின கர்வங்கள் மறையும்.

SHARE