அமெரிக்காவின் தென்னிழக்கு அலபாமாவில் வீசிய சூறாவளி காரணமாக 23 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று பயங்கர சூறாவளி தாக்கியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன.
இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதில் 23 பேர் பலியாகி உள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இவர்ளுள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நகரங்களில் பல வீடுகள் இடிந்து விழுந்தும், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தும், கார்கள் புரண்டும் கிடக்கின்றன. மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து காணப்படுகின்றன. மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.