அலெக்ஸி நவால்னி மரணம்; அவுஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு

87

 

ரஷ்ய எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.

இதனை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Australian Defense Minister Richard Marles)அறிவித்துள்ளார்.

நவால்னியின் (Alexei Navalny) மரணம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர்,

நவால்னியின் மனிதஉரிமைகளை மோசமாக மீறியவர்களை பொறுப்புக்கூறச்செய்வதை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளே இந்த தடைகள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நவால்னியின் (Alexei Navalny) மரணத்திற்கு காரணமானவர்களும் ரஸ்ய அரசாங்கமும் பொறுப்புக்கூறச்செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக எங்கள் சகாக்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நவால்னி (Alexei Navalny) நடத்தப்பட்ட விதம் மற்றும் மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியும் அரசாங்கமுமே காரணம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருதுகின்றது என தெரிவித்துள்ள ரிச்சட்மார்லஸ் (Minister Richard Marles), இது குறித்து சுயாதீன வெளிப்படையான விசாரணைகளை கோருவர்தாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE