தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்குமாம். இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் ரூ. 80 கோடி மதிப்புள்ள தனி விமானத்தையும் வைத்துள்ளாராம். ஹைதராபாத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் பிரமாண்டமான வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என சொல்லப்படுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் ‘Falcon’ Vanity van எனும் வாகனத்தை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 7 கோடி ஆகும். மேலும் Rolls-Royce Cullinan – ரூ. 6.5 கோடி, Hummer H2 – ரூ. 75 லட்சம், Jaguar XJL – ரூ. 99.5 லட்சம், Range Rover Vogue – ரூ. 1.78 கோடி, Volvo XC90 T8 Excellence – 1.30 கோடி ஆகிய கார்களை வைத்துள்ளார்.