அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்

1063

 
பெண்ணுரிமையைப் பாதுகாக்கவேண்டிய ஒரு மார்க்கத்தில் பலவீனமான முறையில் போர்க் கைதிகளான அப்பாவிப் பெண்களை பாலியல் வல்லுறவிலும் , விபச்சாரத்திலும் உபயோகித்துக் கொள்ள முஸ்லிம்களின் அல்லாஹ் அனுமதித்தாரா?இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு சென்ற பெருமை நண்பர்    அன்புராஜுக்கே சேரும்.

girl

நண்பர் அன்புராஜின் பின்னூட்டமொன்று முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சவால் விட்டது.

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார்.
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ……………



நாம் வழமைப் போல நாம் தினமும் சந்திக்கின்ற சில உலமாக்களிடம் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், அடிமைப் பெண்கள் சம்பந்தமாக அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்கள் சம்பந்தமாகவும் கேள்விக் கணைகளை தொடுத்தோம்.

கேட்கும் கேள்விகளின் இருப்பிடம் அஹ்லுல்பைத் தமிழ் தளம் என்றவுடன் அநேகமான உலமாக்கள் கடுமையான மௌனத்தையே பதிலாக தந்தார்கள்.

நம்மை அறியாத சிலர் உடனே “இத்தகைய வசனங்கள் அடிமைகள் இருந்த காலத்தில் அருளப் பட்டவைகளாகும். இப்பொழுதுதான் அடிமைகள் இல்லையே….ஆகவே இது சம்பந்தமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை” என்றார்கள் (டாக்டர் அன்புராஜ்……….ஹி….ஹி…ஹி….)

அதைக் கேட்ட நாம் “சரி……..நாம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை ஆனாலும், அல் குர் ஆன் அடிமைகளுடன் உறவு கொள்வதை அனுமதிக்கின்றதா?” என்று நமக்கு பதில் சொன்னவர்களிடம் திருப்பிக் கேட்டோம்.

“ஆம்……தனது மனைவியுடனும், தனது அடிமைப் பெண்ணுடனும் உறவு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது”என்று சிலர் துணிந்து பெருமையுடன் கூறினர்.

(டாக்டர் அன்புராஜ்……நீங்கள் சொல்லும் விடயம் சரி போலத் தெரிகிறது …………….ஹி……ஹி….ஹி…..)

இன்னொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்தித்த உலமாக்களில் ஒருவர் நம்மிடம் திருப்பி “அடிமைகள்தான் இப்பொழுது இல்லையே ……இதென்ன தேவை இல்லாத கேள்வி?” என்று கேட்டார்.

அவருக்கு நமது நண்பர்களில் ஒருவர்”எங்களது இந்து நண்பர் ஒருவர் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.அவருக்குரிய பதிலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்….சரி…உங்களது பதில் என்ன?” என்று கேட்டார்.

உடனே அந்த அறிஞர்”நீங்கள் உங்கள் இந்து நண்பரிடம் அவரது மதத்தில் இதனை விடவும் மோசமான அனுமதிகள் இருக்கும் விடயத்தை பதிலாக சொல்லுங்களே” என்றார்.

(நண்பர் அன்புராஜ்………ஹி……..ஹி……ஹி…..நம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்)

அடிமைகள் இல்லாத இக்காலத்தில் இது தேவை இல்லாத கேள்வி என்று நம்மை மட்டம் தட்டி விட்டதாக நிமிர்ந்த இன்னுமொரு உலமாவிடம் நமது நண்பர் ஒருவர்..”இப்பொழுதுதான் அடிமைகள் இல்லை….சரி…அடிமைகள் இருந்த காலத்தில் இஸ்லாமிய சட்டம் என்ன?” என்று திருப்பிக் கேட்டார்.

“உறவு கொள்ள முடியும்” அந்த உலமா தனது தாடியைத் தடவியபடி கொஞ்சம் காரமாக “கையில் பணமும் இடுப்பில் சக்தியும் இருந்தால் இது சாத்தியம்” என்றார்.

வில்லத்தனமான அந்தப் பதிலில்  பிரபலமான அந்த உலமா கணப் பொழுதில் நமது மதிப்பில் பரிதாபகரமாக  மதிப்பு இழந்துப்  போனார்.

இன்னுமொரு இடத்தில் நாம் இவ்வாறான கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அடிமைகள் இப்பொழுது இல்லை என்று ஒரு மார்க்க அறிஞர் சொன்னதும், நமது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த நாம் அறியாத நண்பர் ஒருவர் நாம் கேள்விக் கேட்ட மார்க்க அறிஞரிடம்…”நீங்கள் எப்படி இவ்வாறு சொல்கிறீர்கள்……..நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் எத்தனை பெண்கள் விபச்சாரத்தை கருத்தில் கொண்டு கடத்தப் பட்டு விபச்சாரத்துக்காக அடிமைகளைப் போல விற்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?…….இராக்கில் இருந்தும், மத்திய கிழக்கில் இருந்தும் ,லிபியாவில் இருந்தும் எத்தனை எத்தனை இளம் பெண்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விபச்சாரத்துக்காக கடத்திக் கொண்டு போகப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?……..இவர்கள் அனைவரும் sex  slave என்று பெயரிடப் பட்டு விபச்சார அடிமைகளாக விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று பொரிந்து தள்ளினார்.

நமது மார்க்க அறிஞர் கப் சிப் ஆகி கோபத்துடன் எங்களைப் பார்த்து பயங்கரமாக முறைக்கத்  தொடங்கினார்.

நாம் அப்பாவித் தனமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தோம்.(எல்லாம் நண்பர் அன்புராஜின் கேள்விகள் செய்த வேலை…..)

நமக்கு ஏற்பட்ட இதேவிதமான அனுபவங்கள் நண்பர் அன்புராஜின் கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில் உங்களுக்கும் கிடைக்கும்.

முயன்றுதான் பாருங்களேன்.

புனித அல் குர்ஆனில் அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ள அந்த அடிமைப் பெண்ணின் எஜமானுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது என்று பெருமையாக நம்மிடம் பதில் சொன்ன அனைத்து உலமாக்களிடமும் நாம் திருப்பி ஒரே ஒரு கேள்வியைக் கேட்டோம்.

“அந்த அடிமைப் பெண்ணுக்கும், அந்த எஜமானுக்கும் அவர்களின் உறவின் காரணமாக கிடைக்கும் குழந்தையின் நிலை என்ன?………அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் ஒரு அடிமையா?…அல்லது சுதந்திர புருஷரா?”

உற்சாகமாக அடிமைகளுடன் உறவு கொள்ளும் கற்பனையில் இருந்த அனைத்து உலமாக்களும் வாயடைத்துப் போனார்கள்.

(நண்பர் அன்புராஜ்………அப்பாடா!!!)

நண்பர் அன்புராஜின் இத்தகைய உள்ளக் குமுறல்களை சுருக்கமாக இப்படியான கேள்விகளில் பிரித்து வகுக்கலாம்.

அல்லாஹ் அருளிய இறுதி  வேதத்தில் பெண்ணுக்குள்ளபெண்ணுரிமையின்  இலட்சணம் இதுதானா?

டாக்டர் அன்புராஜ் சொல்லுவது போல ஒழுக்கவிழுமியத்தைப் போதிக்க வேண்டிய ஒரு மார்க்கத்தில் ஒழுக்கம் கெட்ட செயல்களின் சுதந்திரத்தை அல்லாஹ் அனுமதித்தாரா?

முஸ்லிம்களின் அல்லாஹ்வின் முன்னிலையில் சிறுவர் சிறுமியரும் அழகான பெண்களும் மனித உரிமைகளுக்கு கிஞ்சித்தும் அருகதை இல்லாதவர்கள் போலும்……….இந்த மார்க்கத்தை தழுவினால் எங்களின் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான்?

மரணத்தின் பின்னர் விமோசனம் தருவதாக சொல்லப் படும் இஸ்லாத்தில் இந்த உலகத்திலேயே விமோசனம் இல்லையே?……….இனியெப்படி மறுமையில் விமோசனம்…?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அல்லது விடைகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று முதலில் புரியவில்லை.

என்றாலும், ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தின் பிதாமகன் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள்.

“இப்ராஹீமுடைய  மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? – தன்னைத் தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர-; நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார்”

(அல் குர்ஆன் 2 : 130 )

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூதிடமும் அவனது ஆட்சிக்கு உதவிய பிரபுக்களிடமும் அடிமைப் பட்டிருந்த அடிமைகளை விடுவிக்க போராடிய ஒரு மா மனிதர்.

ஏகத்துவமான ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டு , அந்த இறைவனை மக்களுக்கு அறிமுகப் படுத்தி மனிதன் மனிதனை அரசாலும் அடிமைத்தன ஆட்சி முறைக்கு அவர் எதிரானவர்.

நபி இப்ராஹீம் வழி வந்த நபி மூஸா (அலை) அவர்களும் பிரவ்னிய மன்னர்களிடம் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களின் விடுதலைக்காக போராடிய ஒரு மா மனிதர்.

ஏகத்துவமான ஏக இறைவனை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்திய தீர்க்க தரிசிகள் அனைவரும் அடிமைத்தனத்துக்கு எதிரானவர்கள்.

வரலாற்று   நிஜங்கள் அப்படி இருக்க….

நாம் சொல்லுகின்ற ஏக இறைவனின் இறுதி மார்க்கம் அடிமைத்தனத்துக்கு ஆச்சரியமாக அனுமதி அளிக்கிறதே?

ஏனைய தீர்க்கதரிசிகளைப் போல ஒரே விதமான ஏகத்துவ மார்க்கத்தைப் போதித்த ஏக இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி சல்லல்லாஹு அலை ஹி வா ஆலிஹி வசல்லம்  அவர்களுக்கு இறைவன் அருளிய மார்க்கத்தில் அடிமைத்தனத்துக்கு அனுமதியும் அடிமைகளின் உரிமை மீறல்களும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக இல்லை.

நிஜத்தில் எம்மை இத்தகைய செய்திகள் அதிர்ச்சிகுள்ளாக்கவில்லை என்பதே நிஜம்.

ஏனெனில்,நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எகிப்து மன்னன் ஒருவனால் அன்பளிப்பாக கொடுக்கப் பட்ட அடிமைப் பெண் அழகிதான் அன்னை ஹாஜரா (அலை) அவர்களாவார்கள்.

அந்த அடிமைப் பெண்ணை அடிமைத் தளத்திலிருந்து உரிமை விடுதலை செய்தது மட்டுமன்றி அவர்களையே திருமணம் செய்து தனது மனைவி என்கிற உயரிய அந்தஸ்த்தை அந்த அடிமைப் பெண்ணுக்குக் கொடுத்த புரட்சியை செய்த செயல் வீர்ரர்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அடிமைகளை மனிதர்கள் அகௌரவப் படுத்தினாலும் அல்லாஹ் அப்படி செய்யவில்லை.

அதன் காரணமாகத்தான் அடிமையாக இருந்த அந்தப் பெண்ணின் கருவிலே நபி இஸ்மாயில் (அலை) அவர்களைப் பிறக்கச் செய்து அந்த வழிமுறையிலேயே இறுதித் தூதரையும் இறுதி இமாமையும் அல்லாஹ் பிறக்கச் செய்தான்.

அது மட்டுமன்றி, புனித காஅபதுல்லாஹ்வில்  அடிமையாக இருந்து உரிமை விடுதலை செய்யப் பட்ட அன்னை ஹாஜரா (அலை) அவர்களை நல்லடக்கம் செய்யவும் அனுமதித்தான்.

ஆகவே, அடிமை ஆண்டான் என்ற வர்க்க வேறுபாடுகளை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.

அல்லாஹ்வின் பார்வையில் மனித சமூகத்தில் அடிமைக்கு ஓரிடமும் அடிமை அல்லாதவர்க்கு பிறிதொரு இடமும் என்ற அளவீடுகள் இல்லை.

அவன் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம்.

அப்படியென்றால் அல்லாஹ் மனிதர்களின் கணிப்பில் அதாவது -மேட்டுக் குடி அராபியரின் கணிப்பில் இழிவான நிலையில் இருக்கும்  அடிமைகளைப் பற்றி எதற்காக புனித அல் குர்ஆனில் குறிப்பிட வேண்டும்?

பேசாமல் அதனை அலட்சியப் படுத்தி இருக்க முடியுமே?

அல்லது அடிமை என்றொரு வர்க்கம் மனிதரிடையே இல்லை என்று கூறி அடிமைத்தனத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியுமே?

உண்மையில் ஏக நாயன் அல்லாஹ் அவனது வேதத்தில் அடிமைகளைப் பற்றி என்ன விதமான கருத்தியலை முன்வைக்கிறான்….?

இஸ்லாத்தைத் தவறாக விளங்கிய மக்கள்  என்று நாம் கருதும் மக்கள் கூறுவது போல…………

——–குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 

————— இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா?

“(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். (இறைவனை விசுவாசிக்காத -நிராகரிப்போராகிய ) இவர்கள் உங்களை நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.ஆனால், அல்லாஹ்வோ தன கட்டளையைக் கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன வசனங்களை அவன் விளக்குகிறான்.”

(அல் குர் ஆன் 2 : 221)

அடிமைகளைப் பற்றியும் அவர்கள் அல்லாஹ்விடத்தில் எத்தகைய கண்ணியத்தில் கணிக்கப் படுகிறார்கள் எனபது பற்றியும் அழகாக விளக்குகிறது அல் குர் ஆனின் இந்த வசனம்.

இறை விசுவாசிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு இல்லை.

அவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒரே சமனாக கணிக்கப் படுகிறார்கள்.

இறைவனை விசுவாசிப்பவர்கள் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்கள்.அவர்களில் ஆண்டான் என்றோ அடிமை என்றோ வேறுபாடுகள் இல்லை.

அவர்கள் அனைவரும் சுவனத்துக்கு சொந்தக்காரர்கள்.

இறைவனை நிராகரிப்பவர்கள் அல்லது இறை நிராகரிப்புடன் அவனுக்கு இணை வைப்பவர்கள் இறைவனின் பார்வையில் மிருகத்தை விடவும் தாழ்ந்தவர்கள்.

அவர்கள் நரகத்துக்கு சொந்தக்காரர்கள்.

அவர்களைப்  பற்றி அல் குர் ஆனில் இப்படி ஒரு வசனம்இருக்கிறது.

“நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துக்கேன்றே படைத்துள்ளோம்;அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆனால்,அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்;அவர்களுக்கு கண்கள் உண்டு;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பார்க்க மாட்டார்கள்; அவர்களுக்கு காதுகள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் நட்போதனையைக் கேட்க மாட்டார்கள்;-இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்.இல்லை !அவற்றை விடவும் வழிக்கேடர்கள்  ;இவர்கள்தாம் நம் வசனங்களை அலட்சியம் செய்தவர்களாவார்கள்”

(அல் குர் ஆன்: 7 : 179 )

அல் குர் ஆனின் இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு உண்மை நமக்கு புரிந்துப் போனது.

ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு அல்லாஹ்விடமோ அல்லது அவனது தூதரிடமோ அல்லது அல் குர்ஆனிலோ இல்லை.

அல்லாஹ்வை விசுவாசித்து அவனை தனது இறைவனாக ஏற்றுக் கொள்ளும் ஒருவன் அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவன்.

அத்தகைய இறை விசுவாசிகளிடையே சமத்துவம் இருக்க வேண்டும்.

அத்தகைய சமத்துவமிக்க விசுவாசிகள் ஒளியின் சொந்தக்காரர்களாகிறார்கள்.

அதன் காரணமாக அவர்கள் சுவனத்துக்கு செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

அவர்கள் அல்லாத ஏனைய மக்கள் அனைவரும் இறைவனின் பார்வையில் கால்நடைகளை விடவும் தாழ்ந்தவர்கள்.

இறைவனை நிராகரித்த காரணத்தால் அவர்கள் அனைவரும் நெருப்பினால் படைக்கப் பட்ட சைத்தானின் -நெருப்பின்- சொந்தக்காரர்களாகிரார்கள்.

அதனால் சைத்தானுடன் இணைநது நெருப்பினால் படைக்கப் பட்ட நரகத்துக்கு செல்கிறார்கள்.

சைத்தானும் அவனது கூட்டத்தினரும் நரக நெருப்பின் சுவையை சுவைக்க நரகம் சொல்வது சரி!

ஆனால், சமத்துவமிக்க ஒளியின் விசுவாசிகள் என்று நாம் பெருமைப் படும் இறைவனை விசுவாசித்த விசுவாசிகளிடையே அடிமைகளைப் பற்றிய அல் குர்ஆன் வசனங்கள் அருளப் படக் காரணம் என்ன?

அல் குர் ஆனின் பார்வையில் மனிதர்கள் சுதந்திரமானவர்கள்.

இறைவன் அருளிய வேதத்தை ஏற்று அவனுக்கு கட்டுப் பட்டு நடக்கும் விடயத்தில் மாத்திரம் செயல் சுதந்திரம் வழங்கப்பட்டவர்கள்.

அவ்வாறான சுதந்திரத்தை கவனமாக பேணும் மக்களின் நடத்தையில் நல்லவைகளே இருக்கும்.

ஆனால், தனக்கு வழங்கப் பட்ட செயல் சுதந்திரத்தைக் கொண்டு யாராகிலும் இறைவனை மறுத்து இறைவனுக்கு எதிரான கொள்கைகளில் நம்பிக்கை வைத்தால் அவனது செயல்களில் நன்மையின் பெயரில் தீமைகள்தான் நிகழும்.

அத்தகைய தீமைகளைத் தேடி நாம் எங்கும் போகத் தேவை இல்லை.

நமது உமையா ஆட்சியாளர்களினதும் அப்பாஸிய ஆட்சியாளர்களினதும் காலத்தில் தொடக்கி வைக்கப் பட்ட அராபிய எதேச்சிகார ஆட்சிகளும் அதன் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உலகை கபளீகரம் செய்த இஸ்லாமிய மன்னராட்சிகளினதும் அடக்கு முறைகளின் தீமைகளை சொல்லலாம்.

மனிதனுக்கு வழங்கப் பட்ட செயல் சுதந்திரத்தில் இறைவனை உண்மையாக நேசிக்கும் மனிதன் அடிமைத்தனத்திட்கும், அநீதத்திட்கும்,அத்து மீறல்களுக்கும் எதிராகவே இருப்பான்.

அத்தகைய மனிதர்களின் ஆட்சியில் நீதி இருக்கும்.

ஆனால், இறைவனை ஏற்றுக் கொண்டதாக சொல்லிக் கொண்டு அவனுக்கு எதிரான கொள்கைகளை தனது செயல் சுதந்திரத்தில் ஏற்றுக் கொண்ட மனிதனின் செயல் விளைவுகள் உலகத்துக்கு ஆபத்தானது.

இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில்தான் நாம் அல் குர்ஆனின் அடிமைகள் சம்பந்தமான வசனங்களை கவனிக்க வேண்டும்.

அல் குர்ஆனில் அடிமைகள் என்றொரு இனம் இல்லை என்று ஏன் இறை வசனம் அருளப் படவில்லை?

அத்தகைய வசனம் அருளப் படுவதற்கும், அவ்வாறான சட்டவாக்கம் நிர்ணயம் செய்யப் படுவதற்கும் அல் குர்ஆன் மிகவும் பொருத்தமான வேத நூல்.

என்றாலும், இறைவனின் வேத நூலில் அவ்வாறான ஒரு சட்டமோ, அல்லது வார்த்தைப் பிரயோகமோ இல்லை.

ஏன் தெரியுமா?

மனிதர்களிடையே ஆதிக்க மனப்பான்மை இயற்கையாகவே குடி கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

இந்தியாவில் சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருந்த திராவிடர்களை…திராவிடத் தமிழர்களை  இந்தியாவின் வட புலத்தில் இருந்து தென்னாட்டுக்கு படிப் படியாக தள்ளிக் கொண்டு வந்த  செயலின் பின்னணியில்  ஆரியர்களின் ஆதிக்க மனப் பான்மை காரணமாக இருந்ததை வரலாற்றை நுணுக்கமாக கவனித்தால் புரிந்துப் போகும்.

சிறுபான்மை இனங்களை அடக்கியாள நினைக்கும் பெரும்பான்மை இனத்தவர்களின் மோசமான செயலின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருப்பதுதான் காரணம் என்பது நாம் அறிந்த உண்மை.

கற்பழிக்கப் பட்ட ஒரு பெண்ணின் பரிதாபமான நிலைமையின் பின்னணியிலும் அந்த செய்கையை செய்த காமுகனின் வக்கிரமான ஆதிக்க மனப் பான்மையே காரணமாக இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எங்கள் வீட்டு தெருக்கோடியில் இருக்கும் பணக்கார வியாபாரி ஏனையவர்களை விடவும் பெரிய வீடு கட்டி, விலை மதிப்பு இல்லாத காரில் பவணி வருவதன் கர்வத்தின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது.

வாகனம் செலுத்தும் பொழுது பின்னால் வரும் வாகனத்துக்கு இடம் கொடுக்காது பாதையை மறித்தவாறு செல்லும் வண்டி ஓட்டுனர்களின் சிறு பிள்ளைத்தனமான செயலின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப் பான்மை இருக்கிறது.

அதே போல மனித சமூகம் கண்டிருக்கும் முன்னேற்றத்தின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது.

மனிதனை மனிதன் அடிமையாக கொள்ளும் கொடூரமும் இந்த ஆதிக்க மனப் பான்மையின் ஒரு வெளிப்பாடாகும்.

ஆகவே, மனித சமூகம் இருக்கும் காலமெல்லாம் நல்ல செயல்களும் மனித மனம் ஏற்காத கொடூரங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகின்றன.

மனித சமூகம் முன்னேற்றம் காணத் துவங்கிய காலம் தொட்டு அடிமைத்தனம் உருவானது.

இஸ்லாத்தின் வெளிப்பாடு தோன்றிய காலத்தில் அடிமைத்தன வியாபாரம் கொடி கட்டிப் பறந்த கதை நாம் அறிந்த கதையாகும்.

பனு உமையாக்கள் அடிமை வியாபாரத்தில் முன்னணியில் இருந்தார்கள்.

அந்த சமூகத்தில் அடிமைகள் நிறைந்து இருந்தார்கள்.

இத்தகைய அடிமைத்தனத்தை மனித சமூகத்தை விட்டும் எப்படி துடைத்தெறிவது?

அதனைத்தான் அல் குர் ஆன் சொல்லி செய்துக் காட்டியது.

ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் அடிமைகளாக இருந்தார்கள்.

அப்படியான நிலையில் அடிமை வியாபாரத்துக்கு இஸ்லாம் எப்படி துணை நிற்கப் போகிறது?

இது தவிர,யுத்தத்தில்  தோல்வி கண்டவர்களை அடிமைகளாக நடாத்துவது அக்கால சமூகத்தில் ஒரு சமூக சட்டமாக இருந்தது.

நபி சள்ளல்லாஹு அலை ஹி வஆலிஹி அவர்கள் செய்த இஸ்லாமிய யுத்தங்களிலும் தோல்வியடைந்தவர்களை கைதிகளாக பிடித்தார்கள்.

அக்கால சமூக சட்டப் பிரகாரம் அந்த யுத்தக் கைதிகள் அடிமைகளாக கருதப் பட்டார்கள்.

உடனே அடிமைகள் சம்பந்தமான வேத சட்டங்கள் மக்களுக்கு அருளப் பட்டன.

எதுவித உரிமையும் இல்லாமல் வெறும் பண்டங்களாக கருதப் பட்ட ஒரு இனத்துக்கு முதன் முதலில் சட்ட உரிமை இயற்றப் படுகிறது.

மனித வக்கிரங்களுக்கு முத்தாய்ப்பு வைக்கும் விதமாக ஏகனின் சட்டங்கள் அநீதம் இழைக்கப் பட்ட அந்த இனத்தின் சார்பாக அருளப்படுகின்றன.

அடிமைகள் சம்பந்தமாக அல் குர்ஆன் ஏன் பேசத் துவங்கியது என்று மெல்ல….மெல்ல….இப்பொழுது புரிந்தது.

“(நம்பிக்கையாளர்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் , அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்;கடும்  போர் செய்து நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய ) கட்டுகளை பலப் படுத்தி விடுங்கள்;அதன் பிறகு யாதொரு ஈடு பெற்றோ அல்லது உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள்; போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களை கிழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறைக் கட்டளையாகும்); அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும் ,(போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை , சிலரைக் கொண்டு சோதிக்கிறான்.”

(அல் குர்ஆன்:47 : 4 )

மனித வாழ்வில் சங்கடங்களைத் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்கின்ற வாழ்வியல் இரகசியங்களை இந்த வசனம் தெளிவு படுத்தும் அழகைக் கவனியுங்கள்.

அதன் பிரகாரம் வெற்றி பெற்ற மனித ஆளுமைக்குள் வந்த  போர்க் கைதிகளுடன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையையும் இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.

அக்கால சமூக சட்டப் பிரகாரம் போரில் கைது செய்யப் படுபவர்கள் அடிமைகளாக மாறுகிறார்கள்.

இத்தகைய அடிமை ஆக்கிரமிப்பை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

அவ்வாறான அடிமைகளை நட்ட ஈடு பெற்றுக் கொண்டு உரிமை விடுதலை செய்து விடுமாறு இஸ்லாம் பணிக்கிறது.

அல்லது எதுவித நட்ட ஈடும்  பெற்றுக் கொள்ளாது உபகாரமாக அவர்களை விடுதலை செய்து விடுமாறும் அல் குர் ஆன் கட்டளையிடுகிறது.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி  அவர்களின் காலத்தில் சிறைக் கைதிகளான அடிமைகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக உரிமை விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் கல்வி அறிவில்லாத முஸ்லிம்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் கைதிப் பரிமாற்றம் செய்யும் நோக்கில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் காலத்தில் போர்க் கைதிகளான அடிமைகள் அடிமைகளாக விற்கப் பட்டார்கள் என்றோ, அல்லது தொடர்ந்தும் அடிமைகளாகவே இருந்தார்கள் என்றோ எதுவித வரலாற்றுக் குறிப்பும் இல்லை.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஹசரத் பிலால் (ரலி) ஒரு அடிமை.

ஹசரத் அம்மார் பின் யாசர் (ரலி) அடிமைக் குடும்பத்தில் பிறந்த ஒரு அடிமை.

சல்மான் பார்சி (ரலி) ஒரு அடிமை.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் அருமை மனைவி மாரியதுல் கிப்தி (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களை மணப்பதற்கு முன்னர் ஒரு அடிமை.

இவர்கள் அனைவரும் அடிமைகளாக  இருந்து அதன் பின்னர் உரிமை விடுதலை செய்யப் பட்டவர்கள்.

இவர்கள் அடிமைகளாக இருந்த காரணத்தால் இவர்களை முஸ்லிம் சமூகத்தில் என்றுமே தரம் தாழ்த்தி கணிக்கப் படவில்லை என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் பலவீனப் பட்ட ஆரம்ப கட்டத்தில் அடிமைகளின் நிலை இவ்வாறு இருக்க நாளடைவில் சக்திமிக்க பலமான நிலைக்கு இஸ்லாம் வளர்ந்ததன் பின்னர் அடிமைப் பெண்களுடன் சுதந்திரமாக உடல் உறவை வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதித்ததா?

ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், முதலில் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்ற சட்டத்தை இஸ்லாம் வகுத்தது.

இந்த ஒழுக்கவியல் சட்டம் அக்கால அராபியாவில் பொதுவாக சிதைந்துப் போய் இருந்தது என்னவோ உண்மை.

என்றாலும், இவ்வாறான ஒழுக்கம் சிதைந்த போக்குக்கு எதிரான நிலையில் தமது மத பாரம்பரியங்களைப் பேணிக் கொண்டிருந்த சில யூதர்களிடையேயும்,  சில கிறிஸ்த்தவர்கள் மத்தியிலும், ஷாபியீன்களின் சில கோத்திர குழுக்களிடையும் தம்மை இப்ராஹீம் நபியின் குடும்பத்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த பனு ஹாசிம்களிடையேயும் திருமணம் முடிக்காமல் உடல் உறவு கொள்ளும் சம்பிரதாயம் இருக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இஸ்லாமிய அடிப்படியிலான திருமணம் என்றால் என்ன?

திருமணத்திட்கு முன்னர் ஆணும், பெண்ணும் திருமணம் புரிந்துக் கொள்ள விரும்ப வேண்டும்.

பெண்ணுக்குரிய ‘மகரை’ ஆண் அந்தப் பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.

இஸ்லாமிய திருமண சட்டத்தில் மகர் கொடுக்கப் படாத நிலையில் அந்தத் திருமணம் சட்டப் படி செல்லாது.

மகர் கொடுக்காமல் மனைவியுடன் வீடு கூடுவது ஹராம்.- பெரும் பாவம்.

இந்த நிலையில திருமணம் செய்யாமல் எக்காரணம் கொண்டும் ஒருவருக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள முடியாது.

இனி டாக்டர் அன்பு ராஜ் தன்னைக் குழப்பியதாக குறிப்பிடும் அல் குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள்.

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 

other questions awaits for your reply.In the Koran Thabharak Joosvin -Al ma aridj Part 29 Chapter.70 – verse 30- clearly states that Wife as well slave girls are not forbidden for sex.Koran clearly permits sex with slave girls.Concubinity is the greatest insult to womenhood. It is a great shock to me that a God made Book advocates cohabitation and crulty and undignified treatment to womenhood.Alisina is proved in one point.Mohammed in tune with the above verse had Maria and other Kumus girls as concubines.It is usual with Muslims, if anything indecent is quoted, they would simply put aside that the source of the Hadis is unreliable.His marriage with sofia,zinab, and Aisha is ….. ? Aisha is 9 years old when he consummated marriage.U tube is full of explanations for that. All confirms that.Arab culture alone approved by God ? I hope to find answers to all questions that are raised in my letters in the course of time. But Why should you Quote from Hinduism which you do not believe and in your opinion anti God and Prophet ?

“ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்”
(அல் குர் ஆன்: 23 : 6 )

“தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்.”
(அல் குர் ஆன் : 70 : 30 )

அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த வசனங்களில் அடிமைப் பெண்களின் அடிமைத்தனத்துக்குப் பதிலாக அவர்களது உரிமை , அவர்களது விடுதலை விடுதலை சம்பந்தமான  விடயங்கள் கூறப்படுகின்றன.

எப்படி?

யாராவது ஒருவர் அவரது பராமரிப்பில் வந்த ஒரு அடிமைப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால், அவர் முதலில் அந்த அடிமைப் பெண்ணை அடிமைத் தனத்தில் இருந்து உரிமை விடுதலை செய்யவேண்டும்.

அதன் பின்னர் அவர் அவளை மணந்து தனது மனைவியாக அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், ஒருவருக்கு உறவு கொள்ள அனுமதிக்கப் பட்ட பெண் அவரது மனைவியாக இருக்க வேண்டும்.

அல்லது , அடிமைகளில் அடிமைத்துவ உரிமை விட்டு அவர் மகர் கொடுத்து தனது  மனைவியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணுடன் அவருக்கு உறவு கொள்ள முடியும்.

இந்த ஒழுக்க முறை இல்லாமல் பெண்களுடன் பலவந்தமாக உறவு கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை.

நமது கோமாளி  காலித் பின் வலீத் போன்ற அக்கிரமக்காரர்கள் செய்த அக்கிரம செய்கைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட செய்கைகள் அல்ல.

அவை அராபிய கோத்திர சட்டதிட்டங்களாக இருந்தன.

………….உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது .குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. முஹம்ம‌துவின் ொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் ‘குமுஸ்’ நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன? நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், ‘புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?’ என்று கேட்க நான், ‘ஆம்!” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு ‘குமுஸ்’ நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது” என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.

மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது……………….
இது நமது கோமாளி காலித் இப்னு வலீதின், உமையா , அப்பாசிய அக்கிரமக்காரக் கூட்டத்தாரின் அக்கிரமத்தை நியாயப் படுத்தி அனுமதிக்க இமாம் அலியின் மீது சுமத்தி இட்டுக் கட்டப் பட்ட ஒரு ஹதீஸ் அறிவிப்பாகும்.

இந்த ஹதீஸ் அறிவிப்பையும், கோமாளி காலித் இப்னு வலீதையும் அவரைப் போன்ற தளபதிகளின் அக்கிரமங்களை முன்மாதிரியாகக் கொண்டு நமது இம்சை அரசர்களுக்கு சொந்தக்காரர்களான உமையா அப்பாசிய கலீபாக்கள் உட்பட இஸ்லாமியப் பெயரில் அரசாண்ட, உலகை கொள்ளையிட்ட, அப்பாவிப் பெண்களை கற்பழித்த சாத்தானிய மன்னர்கள் செய்த அக்கிரம செய்கைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட செய்கைகள் அல்ல.

அவ்வாறான அனைத்து செய்கைகளும் அல் குர் ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானவைகளாகும்.(நண்பர் அன்புராஜ்……இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.)

இஸ்லாத்தில் இவ்வாறான அனுமதிகள் இல்லை என்றாலும், ஒரு முஸ்லிம் அடிமைப் பெண் இத்தகைய இக்கட்டில் சிக்கினால் அவளது நிலை என்ன?

உதாரணமாக நமது கோமாளி காலித் இப்னு வலீதிடம் அநியாயமாக சிக்கிய மாலிக் பின் நுவைராவின் அழகு மனைவியைப் போல………….(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி…?)

…………..உமையாக்களின் படையினரிடம் சிக்கிய அராபியர் அல்லாத அழகிய முஸ்லிம் , முஸ்லிம் அல்லாத பெண்களின் பரிதாப நிலையைப் போல……………..(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி…?)

………….ஹர்ரா போரில் உமையாக்களிடம் சிக்கி தமது கற்பை இழந்த ஆயிரக் கணக்கான சஹாபா அராபிய பெண்களைப் போல…………..(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி…?)

………….பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கிய பங்களாதேச அழகிய முஸ்லிம் , முஸ்லிம் அல்லாத இளம் பெண்களைப் போல………………(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி…?)

……………திடீரென, பாகிஸ்தான் தோற்றோட முஸ்லிம்கள் என்று நம்பி பாகிஸ்தானியருக்கு உதவிய பிகாரிகள், அப்பாவி பிகாரிப் பெண்கள்  பங்களாதேச படையினரிடம் சிக்கிய அவல நிலை போல………… .(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி…?)

அல்லாஹ்வை விசுவாசித்து அதன் பின்னர், இவ்வாறான துர்பாக்கிய நிலையில் அடிமைகளாக அடிமைப் பட்டு இருக்கும் பெண்களுக்கு அல்லாஹ்வின் வேத வசனத்தில் என்ன சொல்லப் படுகிறது?

“……………………………..தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை – அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக – விபசாரத்திற்கு (அவர்களை) நிறப் பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால்,  அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்”
(அல் குர் ஆன் : 24 : 33  )

ஒரு பெண்  கைது செய்யப் பட்டு அல்லது நமது காலத்திய செய்கையாக கடத்தப் பட்டு அடிமையாக நடாத்தப் பட்டு  பாலியல் வல்லுறவில் அல்லது விபச்சாரத்தில் அவளது எஜமானினால் நிர்ப் பந்திக்கப் பட்டால் இஸ்லாத்தின் சட்டவியல் அடிப்படையில் அவள் நிரபராதி.

நிர்க்கதியான அவளின் நிலைமையில் அவளை அவளது தவறுகளை அல்லாஹ் மன்னித்து விடுவதாக வாக்களித்திருக்கிறான்.

மனித மனத்தின் விலங்கியல் கொடூரத்தில் சிக்கிய பரிதாபகரமான ஒரு அடிமைக்கு இதனை விட உயர்தரமான உரிமைப் பத்திரம் வேறென்ன இருக்கப் போகிறது?

இவ்வாறான தெளிவான விளக்கங்கள் இருந்தாலும் மூர்கத்தனமாக மனத்திலே ஒரு நெருடல்.

அதென்ன?

“ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்”
(அல் குர் ஆன்: 23 : 6 )

“தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்.”
(அல் குர் ஆன் : 70 : 30 )

ஒரு அடிமைப் பெண் உரிமை விடுதலை செய்யப் பட்டு ஒருவனின் மனைவியாக   மாறியதன் பின்னர் அவள் மனைவி என்ற வரையறையினுள் வந்து விடுகிறாள்.

இந் நிலையில் அவளுடன் உறவு கொள்வதில் அவன் தவறு காணப் பட போவதில்லை.எனினும் அல் குர்ஆனில் ……….”தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும்……….”  என்று இன்னுமொரு குழுவினரைப் பற்றி அல் குர்ஆன் எதற்காக பேச வேண்டும்?

விடை இலகுவானது.

சுதந்திரமான பெண்ணுக்குத் தான் ஒருவனின் மனைவியாக உரிமை இருக்கிறது.

அந்தப் பெண்ணை ஒருவன் மணந்து தனது மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால் அவளுக்கு அவன் அவளுக்குரிய மகரைக் கொடுத்து அவளை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

அதே போன்று அவனது ஆளுமையில் வந்திருக்கும் அடிமைப் பெண்களில் அவன் உரிமை  விடுதலை செய்து முறைப் படி சொந்தமாக்கி மணந்துக் கொண்டவர்களிடம் மாத்திரமே அவனுக்கு உறவு கொள்ளும் உரிமை இருக்கிறது.

மற்றவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட அவனுக்கு அனுமதி இல்லை.

ஆனால், அவனுடைய ஆளுமையில் அந்த அப்பாவிப் பெண் சிக்கிக் கொண்டதன் காரணமாக அவளைப் பலவந்தமாக அவனால் அனுபவிக்க முடியும்.

அத்தகைய செய்கை பெரும் அநீதமாகும்.

இஸ்லாத்தில் இவ்வாறான அநீதிகளுக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை.

யாராவது அவ்வாறான அநீதத்தை செய்தால் அதற்கான தண்டனையை கட்டாயம் பெற்றுத் தீர வேண்டும்.

அப்படியென்றால்,அந்த அப்பாவிப் பெண்ணின் நிலை… ..

அல்லாஹ்விடம் அவளுக்கு மன்னிப்பு இருப்பதாக அல் குர் ஆன்  நன்மாராயம் சொல்கிறது.

இனி,அடிமைகளின் உரிமை விடுதலை சம்பந்தமாக இஸ்லாம் நிர்ணயித்த சட்ட திட்டங்கள் சம்பந்தமாக கொஞ்சம் கவனிப்போம்..

ஒன்று:

பாவங்களின் பரிகாரமாக அடிமைகளை உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் தனது

சட்டவாக்களில் முதன்மை இடத்தில் வைத்தது.

அதன் பிரகாரம் மக்கள் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக அடிமைகள்

விலைக்கு வாங்கப் பட்டு உரிமை விடுதலை செய்யப் பட்டார்கள்.

இஸ்லாத்தின் இந்த சட்டம் நாளடைவில் அடிமைகள் என்றொரு இனம்

மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் போவதற்குரிய காரணமாக அமைந்துப் போனது.

இரண்டு:
அபராதத் தொகைக்கு ஈடாக அடிமைகள் உரிமை விடுதலை செய்வதையும் இஸ்லாம் இஸ்லாமிய சட்டமாக அனுமதித்தது .

இஸ்லாம் அடிமைத்தனத்தை அனுமதிக்கும் ஒரு மதமாக இருந்தால் அந்தக் கட்டத்தில் அடிமை வியாபாரத்தையல்லவா ஊக்குவித்திருக்கும்.
மூன்று:
ஏதாவது குற்ற செயலுக்குரிய தண்டனைக்கு பிரதியீடாகவும் அடிமைகளை உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் அனுமதித்தது.
நான்கு:
அபராதத் தொகைக்கு பிரதியீடாகவும் அடிமைகள் உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் அனுமதித்தது.

இஸ்லாத்தின் இத்தகைய சட்ட அனுமதிகள் நாளடைவில் அடிமைகள் என்றொரு இனம் அந்த சமூகத்தை விட்டும் இல்லாமல் ஒழிந்துப் போவதற்கு காரணமாக அமைந்துப் போனதுதான் யதார்த்தம்.

SHARE