அல் ஜெஸீ­ராவில் எதி­ரொ­லித்த புர்கா, மத்­ரசா தடை விவ­காரம்

517

 

 

இலங்கை அர­சாங்கம் ‘தீவிர மதக் கருத்­துக்­களைக் கொண்­ட­வர்கள்’ எனக் கரு­தப்­ப­டு­ப­வர்­களை தடுத்து வைத்­துள்­ள­தோடு புர்­காவை தடை செய்ய நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது.

இலங்­கையின் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் ‘இலக்கு’ வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தங்கள் மீது பாகு­பாடு காட்­டப்­ப­டு­வ­தா­கவும் கூறு­கின்­றனர் -. மேலும் அண்மைக் கால­மாக அர­சாங்கம் புர்கா ஆடை­ மீது விதிக்க எத்­த­னிக்கும் தடை தம்மை பாதிக்கும் தீர்­மா­ன­மாகும் எனவும் தெரி­விக்­கின்­றனர்.
பெண்கள் முழு­மை­யாக முகத்தை மூடு­வது மதத் ‘தீவி­ர­வாதம்’ என அர­சாங்கம் கூறு­கி­றது. தேசிய பாது­காப்­பினை கருத்­திற்­கொண்டே இது தடை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றது.

தேசிய கல்விக் கொள்­கையை மீறி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்ட 1,000 க்கும் மேற்­பட்ட இஸ்­லா­மியப் பாட­சா­லை­களை மூட­வுள்­ள­தா­கவும் அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது.
இலங்கை அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நகர்­வுகள் தொடர்பில் அல்-­ஜெ­ஸீரா Inside Story நிகழ்ச்­சியில் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்­தி­யி­ருந்­தது. அந்த நிகழ்ச்­சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முன்னாள் நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம், சமா­தான செயற்­பாட்­டா­ளரும், பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பின் இணைத் தாப­க­ரு­மான ஷிரீன் அப்துல் சரூர் மற்றும் இலங்கை தேசிய சமா­தானப் பேர­வையின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஜெஹான் பெரேரா ஆகியோர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். ஊட­க­வி­ய­லாளர் பீட்டர் டோபி நிகழ்­சி­யினை நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இக் கலந்­து­ரை­யா­டலில் மேற்­படி அதி­திகள் மூவ­ரி­னாலும் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­களை விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்­கா­ககத் தமிழில் தரு­கின்றோம்.

 

ஆணைக்­குழு அவ­சி­ய­மற்ற எல்­லைக்குச் சென்­றுள்­ளது
ரவூப் ஹக்கீம்

ஈஸ்டர் தாக்­கு­தலில் ஈடு­பட்ட சிறு குழு­வி­னரின் தவ­றான செயற்­பாடு கார­ண­மாக தேவை­யற்ற வகையில் முஸ்லிம் சமூ­கத்தின் மீது உண்­மை­யி­லேயே வலிந்து கற்­பிக்­கப்­பட்ட களங்கம் தொடர்பில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அப­ரி­ம­த­மான எதிர்­வி­னையே இது­வாகும். யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்தே நீண்ட கால­மாக ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்து வந்­தது. யுத்தம் முடிந்த கையோடு அடுத்த எதிரி முஸ்­லிம்கள் தான் என்ற எண்­ணப்­பாட்டை உரு­வாக்க வேண்டும் என்ற நிலை சிங்­கள பெரும்­பான்மை மக்­க­ளி­டமும் அப்­போ­தி­ருந்த அர­சாங்­கத்­தி­டமும் இருந்­தது. அந்த கருத்­துடன் ஒரு­மித்த சிங்­கள மக்­களை ஒன்­றி­ணைக்கும் செயற்­பா­டு­களில் அவர்கள் ஈடு­பட்­டனர். இது கையறு நிலை­யி­லி­ருக்­கின்ற, அனைத்து வித­மான கொள்கைத் தீர்­மா­னங்­க­ளி­னூ­டா­கவும் நாளுக்கு நாள் ஓரங்­கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற முஸ்லிம் சமூ­கத்தை குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளாக காண்­பிப்­ப­தற்கும், களங்கம் கற்­பிப்­ப­தற்கும் எடுக்­கப்­படும் முயற்­சி­யே­யன்றி வேறு எது­வு­மில்லை. இது அத்­த­கைய மற்­று­மொரு சம்­ப­வ­மாகும்.

அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக தனது கட்­டுப்­பாட்­டி­லுள்ள தனியார் ஊட­கங்கள் மற்றும் அர­சாங்க ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி இஸ்­லா­மிய பீதி மனோ­பா­வத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பொய்ப் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த சூழ்ச்சி தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. தற்­போது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்­துள்ள நிலையில் ஆணைக்­கு­ழுவும் அவ­சி­ய­மற்ற எல்­லைக்குச் சென்று சர்ச்­சைக்­கு­ரிய வித­மாக இதை தடை­செய்ய வேண்டும் அல்­லது அதைத் தடை செய்ய வேண்டும் என கூறி­யுள்­ளது. இது அர­சாங்­கத்­தினால் நன்கு திட்­ட­மிப்­பட்ட ஊடக தந்­தி­ரோ­பா­யத்தின் ஒரு பகு­தி­யாகும். இது மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். கத்­தோ­லிக்க மக்கள் அல்­லது வேறு எந்த மத சமூ­கத்­திற்கும் முஸ்­லிம்கள் எதி­ரா­ன­வர்கள் அல்லர். இந்த அர­சுக்கு எதி­ராக ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஆட்சி மாற்­றத்­திற்­காக அப­ரி­மி­த­மாக வாக்­க­ளித்­தது இந்த இரு சமூ­கங்­க­ளும்தான். அதன் கார­ண­மா­கத்தான் இவ்­வா­றான சதித்­திட்டம் தீட்­டப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

உண்­மையில் தங்­க­ளது கருத்­தோடு உடன்­ப­டு­கின்ற பெரும்­பான்மை சமூ­கங்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கு அவர்கள் தொடர்ச்­சி­யாக கூறி­வரும் கட்­டுக்­க­தைகள் தங்­க­ளது மட்­ட­மான அர­சியல் அடை­யா­ளங்­களை காட்­டு­வ­தற்­கா­னவை என்­பது வெளிப்­ப­டை­யா­னது. மத­ரசா பாட­சா­லை­களைப் பற்றி பேசும்­போது, அவர்கள் தாங்கள் கூறும் விட­யங்­க­ளுக்கு வலு­வான ஆதா­ரங்­களை முன்­வைக்க வேண்டும். அவர்கள் வஹா­பியக் கொள்கை பற்­றியும் ஏனைய நம்­பிக்­கைகள் பற்­றியும் பேசு­கி­றார்கள். இது நாட்டின் சக­வாழ்­வுக்கு பங்கம் விளை­விக்கும் விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. மத­ரசா பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­படும் பாடத்­திட்­டத்­தி­லி­ருந்து இது வரை அவர்கள் வலு­வான ஆதா­ரங்­களை முன்­வைக்­க­வில்லை. மத­ர­சாக்­களின் பாடத்­திட்­டங்­களில் மாற்­ற­மான அல்­லது ஆபத்­தான விட­யங்கள் இருக்­கின்­றன என்­பதை நான் வன்­மை­யாக மறுக்­கின்றேன். மத­ரசா முறைமை என்­பது மிக நீண்ட கால­மாக செயற்­ப­டு­கின்ற முறை­மை­யாகும். நாம் எமது சமய நிறு­வ­னங்­களை மீள்­கட்­ட­மைப்­பதில் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.

அர­சாங்கம் முஸ்லிம் பெண்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும்
ஷிரீன் அப்துல் சரூர்

முதலில் அவர்கள் எதைத் தடை செய்­யப்­போ­கி­றார்கள் என்­ப­தற்­கான மிகத் தெளி­வான வரை­ய­றை­களை முன்­வைக்­க­வில்லை. சிலர் கூறு­கி­றார்கள் நிகாப் என்று, சிலர் புர்கா என்று கூறு­கி­றார்கள். இங்கு பல்­வேறு வகை­யான முகம் மூடும் ஆடை­களும் உடலை மூடும் ஆடை­களும் காணப்­ப­டு­கின்­றன. இங்­குள்ள முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை எனது கணிப்­பீட்டின் படி ஒரு வீத­மான முஸ்லிம் பெண்­கள்தான் தற்­போது நிகாப் அணி­கி­றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், அவ­ச­ர­காலச் சட்டம் கார­ண­மாக சில பெண்கள் அதனை நீக்­கி­னார்கள். அப்­போது முகம் மூடும் ஆடை மாத்­தி­ர­மல்­லாது உள்­ளூ­ராட்சி அமைச்சினால் வெளி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்கை கார­ண­மாக ஹிஜாப் கூட அகற்­றப்­பட வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டது. எமது அச்சம் என்­ன­வென்றால் அவர்கள் எதனைத் தடை செய்ய முனை­கி­றார்கள் என்­ப­துதான். தற்­போது அனை­வரும் முகக் கவசம் அணிந்து முகங்­களை மறைத்­தி­ருக்­கின்­றார்கள். தேசிய பாது­காப்பு என்­ப­தற்­கா­க­வாக இருந்தால் அது அனை­வ­ருக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்க வேண்டும். எந்த வகை­யிலும் ஆட்­களை தற்­போது அடை­யாளம் காண­மு­டி­யா­துள்­ளது. தற்­போது முஸ்லிம் பெண்­களின் ஆடை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. றஊப் ஹக்கீம் கூறி­ய­து­போல அவர்கள் குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளாக காண்­பிக்கப்­ப­டு­கின்­றனர்.

முஸ்லிம் சமூகம் தன் சமூ­கத்­திற்குள் என்ன தவறு நிகழ்ந்­துள்­ளது என்­பது தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் ஆராய்­கி­றது. இலங்கை அர­சாங்கம் முஸ்லிம் பெண்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும். முஸ்லிம் ஆண்­களும் பெண்­களின் ஆடைகள் தொடர்பில் அடிக்­கடி பேசு­கி­றார்கள். பெண்கள் ஹிஜாப், அபாயா, நிக்காப் போன்­ற­வற்றை அணிய வேண்டும் என கூறு­கி­றார்கள். பெண்­களே தாங்கள் எதை அணிய வேண்டும் எனத் தீர்­மா­னிக்க வேண்டும். முஸ்லிம் ஆண்­களும் எமக்கு அதைக் கூறக் கூடாது. ஏனென்றால் இது எங்கள் சுய கௌரவம், இது எங்கள் உடல், இது எமது உடை ஒழுங்கு.

அந்த வகையில், இலங்கை அர­சாங்கம் முஸ்லிம் பெண்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும். குறிப்­பாக புர்கா, நிகாப் அணியும் பெண்­களின் இணக்­கப்­பாட்­டை­யா­வது பெற்­றி­ருக்க வேண்டும். தொடர்ச்­சி­யாக அணிந்து வரும் ஆடையை குறிப்­பாக பதின்ம வய­தி­லி­ருந்து அணிந்­து­வரும் ஆடை­யொன்­றினை அகற்­று­மாறு கூறினால், அவர்கள் தாம் நிர்­வா­ண­மாக இருப்­ப­து­போ­லவே உணர்­வார்கள்.

எனவே, கருத்துப் பரி­மா­றல்கள் இடம்­பெ­ற­வில்லை. ஏனைய நாடு­க­ளி­லி­ருந்து தவ­றான முன்­னு­தா­ர­ணங்­களை இலங்கை அர­சாங்கம் இர­வல்­பெறக் கூடாது என்றே நாம் கூறு­கின்றோம். இது பன்­மைத்­துவ நாடு. எமது அர­சி­ய­லை­மைப்பு பல சமூக பல்­லின அமைப்பு தொடர்பில் பேசு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 10ஆவது அத்­தி­யாயம் சமய சுதந்­திரம் பற்றி பேசு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 12ஆவது அத்­தி­யாயம் சட்­டத்தின் முன் அனை­வரும் சமம் என கூறு­கின்­றது. விட­யங்கள் அனைத்­திலும் இலங்கை அர­சாங்கம் மிக மோச­மாக தோல்வி கண்­டுள்­ளது. இந்த சமூ­கத்­தினை தொடர்ச்­சி­யாக இலக்கு வைத்துச் செயற்­ப­டு­கின்­றது. சில வாரங்­க­ளுக்கு முன்னர் தான் நல்­ல­டக்கம் செய்­ய­வ­தற்­கான உரிமை வழங்­கப்­பட்­டது. இந்த உரிமை கொவிட் நிலை­மையைக் காரணம் காட்டி அநி­யா­ய­மாகப் பறிக்­கப்­பட்­டி­ருந்­தது. நீதி­ய­மைச்சர் ஒருவர் முஸ்­லி­மாக இருக்கும் நிலை­யி­லேயே நிகாப் அகற்­றப்­ப­டு­கின்­றது. இந்த அர­சாங்கம் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. ஆண்கள் புர்கா அல்­லது நிகாப் அணி­வ­தில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண்கள். பெண்­களை ஏன் தண்­டிக்­கி­றீர்கள் என­பதே எமது கேள்வி.

இந்த அர­சாங்­கத்தின் கீழ் நாம் மிகுந்த நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ளோம். வெளிப்­ப­டை­யாகச் சொன்னால், சுதந்­திர தினத்­தன்று இந்த நாட்டின் தலைவர், இது ஒரு சிங்­கள நாடு எனவும் தான் பௌத்­தர்­க­ளுக்­கு­ரிய ஜனா­தி­பதி எனவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இது உண்­மையில் சிறு­பான்­மை­யினர் இந்த நாட்­டுக்கு சொந்­தக்­கா­ரர்கள் அல்லர் எனக் கூறு­வ­தாகும். அடக்கம் தொடர்­பாக பல்­வேறு நட­வ­டிக்­கைளை எடுத்­த­தோடு நீதி­மன்­றங்­களை நாடிய போதிலும், இறு­தி­யாக சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கே அர­சாங்கம் அடி­ப­ணிந்­தது. எனவே சர்­வ­தேச அழுத்­தமே முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான ஒரே­யொரு வழி­யாகும். எதிர்­வரும் 22 ஆம் திகதி இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வைக்கு வரு­கின்­றது. இதில் பல முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. அந்த நாடுகள் அத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வெற்­றி­பெறச் செய்ய வேண்டும் என நாம் எதிர்­பார்க்­கின்றொம் ஏனென்றால் அந்தத் தீர்­மா­னத்தின் 7 ஆம் மற்றும் 8 ஆம் பந்­திகள் சிறு­பான்மை மக்­களைப் பற்­றியும் அவர்­க­ளது உரி­மைகள் பற்­றியும் பேசு­கின்­றன. இலங்கை உண்­மை­யி­லேயே நல்­லி­ணக்­கத்தை விரும்­பு­மாக இருந்தால் சிறு­பான்மை மக்கள் தொடர்பில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளாது. என்னைப் பொறுத்த வரை இந்த அர­சாங்கம் அவ்­வா­றான விட­யத்­தினை முன்­கொண்டு செல்­லாது என்றே தோன்­று­கின்­றது.

புர்கா, மத்­ரசா விவ­கா­ரங்­களில் முடி­வுக்கு வர­மாட்­டார்கள்
ஜெஹான் பெரேரா

புர்­காவை தடை செய்யும் தீர்­மானம் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. குறித்த முன்­மொ­ழிவு தேசிய பாது­காப்பு அமைச்­ச­ரினால் கையொப்­ப­மி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அது இது­வரை அமைச்­ச­ர­வை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அது பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­படும். இது ஒரு சர்ச்­சைக்­கு­ரிய விடயம் என்­பதை அர­சாங்கம் அறிந்து கொண்­டுள்­ளது. அவர்கள் புர்­காவை தடை செய்­வது மற்றும் அமைச்சில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக ஆயிரம் மத­ர­சாக்­களை மூடு­வது ஆகி­யன தொடர்பில் முடி­வுக்கு வர­மாட்­டர்கள் என்றே நான் கரு­து­கின்றேன். அவற்றை பதிவு செய்­யு­மாறு கோரு­ப­வர்கள் அவற்றை கண்­கா­ணிப்­பார்கள், மாறாக அவற்றை மூடி­வி­ட­மாட்­டார்கள் என்றே நினைக்­கின்றேன். ஆனால், றஊப் ஹக்கீம் மற்றும் ஷிரீன் கூறி­ய­து­போல, தேசி­ய­வாதம் என்ற விட­யத்தைப் பொறுத்­த­வரை சிங்­கள தேசி­ய­வாதம் மற்றும் தேசத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துதல் என்ற அடிப்­ப­டையில் முஸ்­லிம்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் இந்த அர­சாங்கம் தெரிவு செய்­யப்­பட்­டது.

இத் தாக்­கு­தலில் ஈடு­பட்ட குழு­வி­லி­ருந்த பலர் வெளி­நா­டு­களில் நன்கு படித்த இளை­ஞர்கள், அவர்­க­ளுக்கு இலங்கை முஸ்­லிம்­க­ளுடன் பெரு­ம­ளவு தொடர்­புகள் இருக்­க­வில்லை. அவர்­க­ளது செயற்­பாட்­டிற்­காக முஸ்லிம் சமூ­கத்தை குற்றம் கூற முடி­யாது. அனால் அதுதான் தற்­போது நடக்­கின்­றது. நடை­பெ­று­கின்ற அந்த விடயம் அநீ­தி­யா­ன­தாகும், ஏனெனில் பாரம்­ப­ரி­ய­மாக இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் அமை­தி­யான சமூகம். இலங்கை அர­சாங்­கத்­திற்கும் தமிழ் கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கும் இடையே இடம்­பெற்ற முப்­பது வருட யுத்­தத்தில் அவர்கள் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கினர். முஸ்­லிம்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாக இருந்­த­தற்கோ வன்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தற்கோ எந்­த­வித ஆதா­ரங்­களும் கிடை­யாது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்ற பின்­னரும் அவ்­வாறு அவர்கள் செயற்­ப­ட­வ­லில்லை. அர­சாங்கம் முஸ்­லிம்­களை இவ்­வாறு இலக்கு வைப்­பது நியா­ய­மா­ன­தல்ல.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் கார­ண­மாக இலங்­கையில் கிறிஸ்­த­வர்கள் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்கள் எனப் பார்க்­கப்­ப­ட­வில்லை. ஆனால் முஸ்­லிம்கள் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்­க­ளாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றனர். இது நியா­ய­மற்­ற­தாகும். அவர்கள் தங்­க­ளது விசா­ர­ணையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை வெளிப்­ப­டுத்த வேண்டும். மத­ர­சாக்­களில் கற்­பிக்­கப்­படும் விட­யங்கள் தொடர்பில் கண்­டு­பி­டித்­தி­ருந்தால் அவற்றை வெளிப்­ப­டுத்த வேண்டும். பெரும்­பா­லான மத­ர­சாக்கள் அர­சாங்­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டவை. அவர்கள் மூடி­விட முனையும் மத­ர­சாக்கள் பதிவு செய்­யப்­ப­டா­தி­ருந்தால் அவற்றை பதிவு செய்யக் கோர வேண்டும்.

இலங்­கையில் பெரும்­பான்­மை­யினர் சிங்­கள மக்­க­ளாவர். அவர்கள் வர­லாற்று ரீதி­யாக தங்­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்று உணர்­கின்­றார்கள். 2000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமிழ் படை­யெ­டுப்பு, 500 வருட கால­னித்­துவ ஆட்சி, இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தமிழ் ஆயுதப் போராட்­டத்­திற்கு இந்­தியா உதவி செய்­தமை, பிரச்­சி­னை­யினை சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தி­யமை. இவை சிங்­கள மக்கள் தாம் பாது­காப்­பின்­மை­யுடன் இருப்­பதை இல­கு­வாக உணரச் செய்த விட­யங்­க­ளா­ககும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இதனை உண்­மையில் செய்­தது. அவர்கள் பாது­காப்­பின்மை மிக மோச­மாக இருப்­பதை இதன் மூலம் உணர்ந்­தனர். முஸ்­லிம்கள் தமது எதி­ரிகள் என நினைக்க கள் என நினைக்க வைத்த சம்பவம் இதுவாகும். அதனை நான் மறுக்கவில்லை. மிக அண்­மையில் புர்கா தடை மற்றும் மத­ரசா தடை என்­பன பற்றிப் பேசப்­ப­டு­கின்­றது. நான் சமூக வலைத்­த­ளங்­களில் வாசித்த விட­யங்கள் இதற்கு எதி­ரா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­றது. ஏனைய பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே இவ்­வாறு செய்­யப்­ப­டு­கின்­றது என பலர் கூறு­கின்­றனர். அர­சாங்கம் பல்­வேறு மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. குறிப்­பாக பொரு­ளா­தாரப் பிரச்­சினை, வெளி­நாட்டு நாண­ய­மாற்று பிரச்­சி­னை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு சீனா­வி­ட­மி­ருந்து கடன்­களை கோரு­கின்­றமை, கொவிட் பிரச்­சினை இலங்­கை­யி­னையும் உலகின் ஏனைய நாடு­க­ளையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளமை, பாரிய ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் குறிப்­பாக சீனி இறக்­கு­ம­தியில் ஊழல் இடம்­பெற்­றுள்­ளமை. இவற்றை சுட்­டிக்­காட்டி கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கா­கவே இவ்­வாறு செய்­யப்­ப­டு­கின்­றது என சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுதுகின்றார்கள். இன்னும் சில மாதங்களில் தேர்தலும் நடைபெறவுள்ளது

SHARE