அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது நிதி போதுமானவையல்ல: முஸ்லிம் காங்கிரஸ்.

614

அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதுமானவையல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் இது, கட்டிட சேதங்களை மறைக்கக்கூட போதாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக முஸ்லிம்கள் தம்மை தாமே தாக்கிக் கொண்டதாகவும் தமது வீடுகளுக்கு தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் அரசாங்கம் கூறுவதாக ஹசன் அலி குறிப்பிட்டார்.

இலங்கை எமது நாடு எனவே அங்கிருந்து வெளியேறவோ அல்லது மற்றவரின் உதவியை எதிர்பார்க்கவோ தேவையில்லை என்றும் ஹசன் அலி தெரிவித்தார்

 

SHARE