அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்

398
அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய ‘ஐந்து’

அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய ‘ஐந்து’
பெண்களுக்கு அழகு மிகவும் அவசியம். அதனால் அவர்கள் இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தலாம். ஆனால் செயற்கையான அழகுக்கு அடிமையாகிவிடக்கூடாது. மேலும் வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். இளம் பருவத்திலேயே தேவையற்ற அழகு சிகிச்சைகளை மேற்கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல.

அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!

1. பேஷியல் 30 வயதுக்கு முன்பு வேண்டாம்

பெண்களின் முகத்தில் பொலிவையும், மென்மையையும் உருவாக்க துணைபுரிவதுதான் ‘பேஷியல்’. பலவகையான பேஷியல்கள் இப்போது நடைமுறையில் உள்ளன. அதை பார்த்து பெண்களும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் 15 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு பேஷியல் தேவையில்லை. ஏன்என்றால் இந்த வயதில் பெண்களின் முகம் இயல்பாகவே அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 30 வயதுக்கு மேல் பேஷியல் செய்துகொள்ளலாம். இரவுப் பணி செய்யும் பெண்களின் முகத்தில் முப்பது வயதுக்கு மேல் சுருக்கமும், இறுக்கமும் தோன்றும். அவர்களுக்கு பேஷியல் பொலிவைத் தரும். பழங்களை பயன்படுத்தி செய்யும் புரூட் பேஷியல் சிறந்தது.

2. வாக்சிங் செய்வதை குறையுங்கள்

நரையை மறைப்பதற்காக செய்யப்படும் ‘டை’, புற்றுநோயை உருவாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. டையில் இருக்கும் ரசாயனங்கள் முடியை பலவீனமாக்குகின்றன. சிலருக்கு அலர்ஜியை உருவாக்குகிறது. மேலும் அடிக்கடி டை பூசினால், சருமத்தின் நிறமும் மாறும். அதனால் டை பூசுவதை குறையுங்கள். தேவைப்பட்டால் ஹெர்பல் டையை பயன்படுத்துங்கள்.

வாக்சிங் செய்யும் பெண்கள் சருமத்திற்கு நான்கு முதல் 6 வாரங்கள் வரை இடைவேளை கொடுக்கலாம். முடி துளிர்த்த உடனே வாக்சிங் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி வாக்சிங் செய்வது சருமத்தில் அலர்ஜியையும், பருக்களையும் தோற்றுவிக்கும்.

3. கூந்தலுக்கு வேண்டாம் ரசாயனம்

கூந்தல் நீண்டு மினுமினுப்பாக காட்சியளிக்க பெண்களில் சிலர் ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் ஸ்மூத்னிங் போன்றவைகளை செய்கிறார்கள். ஆனால் இவைகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அயர்னிங் போன்றவை கூந்தலை பலவீனப்படுத்தி வறண்ட தன்மையை உருவாக்குகிறது. முடி விரைவாக முறிந்துபோகவும் செய்யும். இவைகளை அடிக்கடி செய்தால் மண்டை ஓட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சொறி போன்றவையும் தோன்றும். ரசாயனத்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி அதிகமாக உதிரவும் செய்யும். அதனால் கூந்தலுக்கு ரசாயன பயன்பாட்டை குறைத்திடுங்கள்.

4. அழகு நிலைய சிகிச்சைகள் அவசியமில்லை

முகத்தில் தோன்றும் புள்ளிகள், பருக்கள், படைகள் போன்ற பலவற்றையும் பல்வேறு அழகு நிலையங்களில் நீக்குகிறார்கள். ஆனால் இதை எல்லாம் சரும நோய் டாக்டர்கள் செய்வதுதான் மருத்துவரீதியிலான அணுகுமுறையாக இருக்கும். இதற்கான சிகிச்சைகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை பயன்படுத்துவார்கள். அவைகளை மிகுந்த சுத்தத்தோடும், கவனத்தோடும் பராமரிக்கவேண்டும். அதனால் இத்தகைய சரும சிகிச்சைகளில் பெண்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியம்.

5. பிளீச்சிங் அடிக்கடி வேண்டாம்
பெண்களின் முகத்தில் இருக்கும் கறுப்பு ரோமங்களுக்கு நிற வித்தியாசத்தை உருவாக்குவது, பிளீச்சிங். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கவும் இது உதவும் என்றாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனப் பொருட்கள் முக சருமத்திற்கு கெடுதல் உருவாக்குபவைகளாக இருக்கின்றன. அது தற்காலிகமாக நிறத்தை தந்தாலும், அடிக்கடி உபயோகித்தால் முகத்தில் கறுப்பு நிற படைகள் போன்று தோன்றும். இயற்கையான மிருதுத்தன்மை பாதிக்கப்பட்டு சருமம் கெட்டியாகிவிடும். அடிக்கடி பிளீச் செய்தால் முகத்தில் குழி போன்றும் உருவாகும். பிளீச்சிங் ஏஜெண்டில் இருக்கும் ரசாயனங்கள் கண்களுக்கும் எரிச்சலையும் தோற்றுவிக்கும். அதனால் பிளீச்சிங்கை தவிர்ப்பது நல்லது.

SHARE