இன்றைய அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இப் பூமியில் இருந்து முற்றாக அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கக்கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவ்வாறு மீண்டும் உருவாக்குவதற்காக அவற்றின் மூதாதையர்களின் பரம்பரை அலகுகள் அல்லது அவற்றினை ஒத்த ஏனைய இனங்களின் மரபணுக்களை பயன்படுத்த முடியும் என தெரிவித்து வருகின்றனர்.
இத் தொழில்நுட்பத்தில் சுமார் 25 உயிரினங்களை மீளவும் உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். அவ் உயிரினங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு,
கஸ்பியன் புலிகள் (Caspian Tigers)
இப் புலி இனமானது துருக்கி நாட்டிலுள்ள காடுகளில் காணப்பட்ட நிலையில் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் முற்றாக அழிவடைந்திருந்தது.
Aurochs
ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா பகுதியில் வசித்து வந்த இந்த காளை இனத்தினை உருவாக்கும் முயற்சி 2009ம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றது.
Carolina Parakeet
இரு சிறிய ரக கிளி இனமாகும். இறுதியாக புளோரிடாவில் ஒரு ஒரு கிளி காணப்பட்ட நிலையில் அதுவும் 1904ம் ஆண்று இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Cuban Macaw
கியூபாவில் வசித்து வந்த இந்த கிளி இனம் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்தது. இவை தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வந்த நிலையில் 1885ம் ஆண்டு அழிவடைந்துள்ளது.
Dodo
அழிவடைந்த இனங்களில் பிரபல்யமானதாகக் காணப்படும் இவ் உயிரினம் Mauritius தீவில் காணப்பட்டது. 2007ம் ஆண்டு இதன் எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள DNA ஐ பயன்படுத்தி மீண்டும் உருவாக்கப்படவுள்ளது.
Woolly Mammoth
யானையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த போதிலும் உடல் முழுவதும் உரோமங்களைக் கொண்ட இவ் விலங்கு 4,000 ஆண்டுகளுக்கு முன் இப் பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்தது.
Labrador Duck
வாத்து இனத்தைச் சேர்ந்த இவ் உயிரினம் 1850 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அழிவை எதிர்நோக்கியிருந்தது.
Woolly Rhinoceros
காண்டா மிருக இனத்தை சேர்ந்த இவ் விலங்கு ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வசித்து வந்தது. மனிதர்கள் வேட்டையாடியதன் மூலம் அழிவடைந்துள்ளது.
Heath Hen
வட அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இப் பறவையினம் 1932ம் ஆண்டில் முற்றாக அழிவை எதிர்நோக்கியது.
Ivory-billed Woodpecker
தென் அமெரிக்காவில் உள்ள வேர்ஜின் காட்டுப்பகுதியில் வசித்து வந்த இந்த மரங்கொத்தி இனம் 1940ம் ஆண்டு வரை காணப்பட்டது.
இதன் மாதிப் பொருட்களை சேகரிப்பதற்கான ஆராய்ச்சிக்காக 50,000 டொலர்கள் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Imperial Woodpecker
இதுவும் ஒரு மரங்கொத்தி பறவை இனத்தைச் சார்ந்ததுதான். இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே பூமியிலிருந்து அழிவடைந்துள்ளது.
Moa
பறக்க முடியாத பறவையாக காணப்படும் இவ் உயிரினம் நியூசிலாந்தில் காணப்பட்டது. இது 12 அடிகள் வரை உயரமாக வளரக்கூடியது. மனிதர்கள் வேட்டையாடியதன் மூலம் 1400ம் ஆண்டளவில் அழிவை எதிர்நோக்கியிருந்தது.
Elephant Bird
யானைப் பறவை என்றழைக்கப்படும் இவ் உயிரினம் மடகஸ்கார் தீவில் காணப்பட்டது. இது 17ம் நூற்றாண்டில் அழிவை எதிர்நோக்கியிருந்தது.
Pyrenean Ibex
இவ் விலங்கு பிரான்ஸின் தென்பகுதி மற்றும் Pyrenees இன் வட பகுதி ஆகியவற்றில் வசித்து வந்த நிலையில் 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் முற்றாக அழிவடைந்தது.
Quagga
தென்னாபிரிக்காவில் வசித்து வந்த இக் குதிரை இனம் 1883ம் ஆண்டு அழிவடைந்தது. எனினும் இதனை மீள உருவாக்கும் முயற்சி 1987ம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றது.
Freshwater Dolphin (நன்நீர் டொல்பின்)
நன்னீரில் வசிக்கக்கூடிய இந்த டொல்பின் இனமானது சீனாவின் Yangtze ஆற்றில் அதிகளவில் வசித்து வந்தன. இவை ஒரு தசாப்தங்களுக்கு முன்னர் அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Tasmanian Tiger
நரியின் முகத்தையும், புலியின் உடல் அமைப்பையும் கொண்ட இவ் விலங்கு அவுஸ்திரேலியா, தஸ்மானியா மற்றும் நியூ கினியாக ஆகிய நாடுகளில் 1960ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளன.
Irish Elk
மான் இனத்தில் மிகவும் பெரிய விலங்காக இது கருதப்படுகின்றது. இறுதியாக சைபீரியாவில் வாழ்ந்துவந்த இவை 7,700 வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்துள்ளது.
Caribbean Monk Seal (கரீபியன் சீல்)
எண்ணெய் எடுப்பதற்காக வேட்டையாடப்பட்டு வந்த இவ் உயிரினம் 1952ம் ஆண்டு காலப்பகுதியில் முற்றாக அழிவடைந்துள்ளது.
Huia
இப் பறவையினத்தில் ஆணின் அலகு சிறியதாகவும், பெண்ணின் அலகு நீளமானதாகவும் காணப்படும். இவை 20ம் நூற்றாண்டுவரையே வாழ்ந்துள்ளன.
Moho
ஹவாய் தீவுகளில் காணப்பட்ட இப் பறவையினம் அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டமையாலும், மனிதர்கள் வேட்டையாடியதாலும் அழிவை எதிர்நோக்கின.
எனினும் 1934ம் ஆண்டுவரை இவை வாழ்ந்துள்ளன.
Steller’s Sea Cow
மனாட்டி மற்றும் டுக்ஓங் ஆகிய இனங்களுக்கு நெருங்கியதாகக் காணப்படும் இக் கடற்பசுவானது வடக்கு பசுபிக் கடற்பகுதியில் அதிகளவில் வாழ்ந்துள்ளது.
எனினும் கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்துள்ளது.
Passenger Pigeons
புறா இனத்தைச் சேர்ந்ததாகக் காணப்படுவததுடன், 20ம் நூற்றாண்டிலேயே முற்றாக அழிவை சந்தித்திருந்தது.
Gastric-brooding Frog
இத் தவளை இனமானது 1983ம் ஆண்டில் அழிவடைந்த நிலையில் 2013ம் ஆண்டிலிருந்து மீள உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
Great Auk
வடக்கு அட்லான்டிக், வடக்கு ஸ்பெயின் முதல் கனடா வரை காணப்பட்ட இப் பறவை இனம் 19ம் நூற்றாண்டில் முற்றாக அழிவடைந்திருந்தது.