அவிசாவளை ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி

121

 

அவிசாவளை (Avisavala) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடுதியில் நேற்று (10) மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சடலம்
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE