அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் காணாமல் போன குடும்பம் மீட்பு

97

 

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரு குடும்பம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அவுஸ்திரேலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறித்த குடும்பம் கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது மகிழுந்தில் அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் இருந்து குறித்த குடும்பத்தினர் பயணத்தை ஆரம்பித்திருந்தனர் இதன்போது வெள்ளம் காரணமாக அவர்களது மகிழுந்து சேற்றில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியான சீரற்ற காலநிலையினால் அவர்களை தேடும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தடைப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய மீட்பு படையினர் குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் மீண்டும் முன்னெடுக்கப்படட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE