இந்தப் பயணத்தின் போது, அவுஸ்திரேலியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய தகவல்களை அவர் பூர்த்தி செய்வாரென எதிர்பார்க்கப்படுவதாக ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு வார கால வர்த்தக விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ரோனி அபொட் முதற்கட்டாக ஜப்பான் சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தில் மாட்டிறைச்சிக்கான வரியை 38.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை குறைப்பது பற்றி ஜப்பானியர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். அதற்கு பதிலாக கார் ஏற்றுமதிக்கான ஐந்து சதவீத வரியை அவுஸ்திரேலிய குறைக்க வேண்டும் என்ற சமிக்ஞையை ஜப்பானிய அரசாங்கம் விடுத்தது. இதன்மூலம், அவுஸ்திரேலியாவில் ஜப்பானிய காரொன்றின் விலை 1,000 டொலரால் குறையும். ஜப்பான் என்பது அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகத் திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 70 பில்லியன் டொலர்களைத் தாண்டியிருந்தது. இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை இருநாடுகளுக்கும் பலன் தருவதாக அமையுமென ஜப்பானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் டக்கடோஷி இற்றோ தெரிவித்திருந்தார். |