அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டே தான் இருப்பா.. தனது மனைவி சங்கீதா குறித்து நடிகை திரிஷா முன் இப்படி பேசிய விஜய்

66

 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்று இந்த திருமணத்தில் பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

விஜய் – சங்கீதா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சய் என்ற ஒரு ஆண் பிள்ளையும், திவ்யா என்கின்ற ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சஞ்சய் தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கிவிட்டார்.

நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல், இருவரும் பிரிந்துவிட்டார்கள் என பல வதந்திகள் இணையத்தில் பரவியது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டே தான் இருப்பா
இந்நிலையில், நடிகர் விஜய், நடிகை திரிஷா இருவரும் இணைந்த பல ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த நடிகை அணு ஹாசன், ‘உங்க மனைவி உங்கள என்ன சொல்லி திட்டுவாங்க’ என விஜய்யிடம் கேள்வி கேட்டார்.

இந்த கேள்விக்கு பதில் கொடுத்த விஜய் ‘அவ எல்லாத்துக்கும் திட்டிக்கிட்டே தான் இருப்பா’ என விளையாட்டாக பதில் கூறினார். பல வருடங்களுக்கு முன் கொடுத்த இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE