அஷ்வினுக்கு அர்ஜுனா விருது வழங்க பி.சி.சி.ஐ பரிந்துரை

451
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் வீரர்களுக்கு விருது வழங்கும் வகையில் அரசு சார்பில் 1961 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான அஷ்வினை அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது. அஷ்வினுக்கு இவ்விருது வழங்கப்பட்டால், அர்ஜூனா விருதைப் பெறும் 46வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அஸ்வின் முறையே 40 மற்றும் 46 ரன்களை குவித்தார். ஆனால் 14 ஓவர்கள் பந்துவீசியும் அவர் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் 27 வயதான அஸ்வின் முன்னணி ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE