ஆக்ஷன், காமெடி படத்தில் சந்தானம்

163
தில்லுக்கு துட்டு 2  படத்தைத் தொடர்ந்து சந்தானம் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஆக்‌ஷன், காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார்.


தில்லுக்கு துட்டு 2 படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானத்தின் அந்தஸ்தை வெகுவாக உயர்த்தி உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஆர். கண்ணனுடன் புது படத்துக்காக சந்தானம் இணைந்துள்ளார். இப்படத்தை மசாலா பிக்ஸ்க்காக ஆர் கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி ப்ரொடக்ஷனுக்காக எம்கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்கள். இது ஆக்ஷ்ன், காமெடி மற்றும் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்கள் உள்ள பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ளது. முன்னணி நடிகை ஒருவர் இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

SHARE