ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு ஆசிய ஒலிம்பிக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

321

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு ஆசிய ஒலிம்பிக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது குறித்து ஆசிய ஒலிம்பிக் நிர்வாகம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

எனினும் இப் போட்டி 50 ஓவர் போட்டியா அல்லது 20 ஓவர்  போட்டியா என்பது இன்னும் உறுதிசெய்யவில்லை.

SHARE