ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

264

அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறைப்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது போன்று ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தால் பிள்ளைகளுக்கான பாடங்களை உள்ளடக்குவதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு அவர்களை உரிய முறையில் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

SHARE